தமிழகத்தில் தொடர் மழை.. 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னை: தொடர் மழையால் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 26 ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
தென் மேற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தீவிரமடைவதால் தமிழகத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் 'ஆரஞ்ச் அலர்ட்' விடுத்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய இலங்கை கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுகிறது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாட்டின் கரையை நோக்கி நகருவதால் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் நவம்பர் 1ம் தேதி வரை கனமழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த மூன்று நாட்களில் மேற்கு நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் ராமநாதபுரம்,தூத்துக்குடி,நாகை மற்றும் மயிலாடுதுறை ஆகிய நான்கு மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் நேற்றைய தினம் தெரிவித்திருந்தது.
இதனால் நாகை, திருச்சி, நெல்லை, தஞ்சை, தூத்துக்குடி, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று முன் தினம் மாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து நேற்று காலையும் மழை தொடர்ந்ததால் மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முதல் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடலூர், புதுக்கோட்டை, நெல்லை, திருவாரூர், தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்தனர்.
இதைத் தொடர்ந்து ராமநாதபுரத்திலும் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அது போல் விருதுநகரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் இன்றைய தினம் 8 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications