அடேங்கப்பா! பொங்கல் கொண்டாட சென்னையில் இருந்து 8 லட்சம் பேர் பயணம்.. பஸ்களில் மட்டுமே இவ்வளவு பேரா?
சென்னை: பொங்கல் பண்டிகையை ஒட்டி 2 நாட்களில் சென்னையில் இருந்து 4.34 லட்சம் பேர் பேருந்துகள் மூலம் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. தொடர் விடுமுறை விடப்படுவதால் பொங்கல் பண்டிகையை கொண்டாட நகரங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அதன்படி, நகரங்களில் வசிக்கும் மக்கள் பெரும் திரளாக சொந்த ஊர்களுக்குச் சென்று வருகின்றனர்.

பொதுமக்களின் வசதிக்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக நேற்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் கோயம்பேடு, கிளாம்பாக்கம் உட்பட 6 இடங்களில் இருந்து பேருந்துகள் புறப்படுகின்றன.
சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 4,706 சிறப்பு பேருந்துகளும், மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்ல 8,478 சிறப்பு பேருந்துகள் என அடுத்த 3 நாட்களுக்கு 13,184 சிறப்பு பேருந்துகளையும் இயக்க தமிழ்நாடு போக்குவரத்து துறை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து 4.34 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. மொத்தம் 7,474 அரசு பேருந்துகளில் 4.34 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 2,210 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. 2.30 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர் என போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் இருந்து நேற்று முன்தினம் 2,100 பேருந்துகள், 1,260 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 3,360 பேருந்துகள் இயக்கப்பட்டன. இவற்றில் மொத்தம் 1.95 லட்சம் பேர் பயணித்தனர். 2 நாட்களில் மட்டும் 4.34 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம் செய்துள்ளனர்.
சென்னையில் இருந்து கடந்த 2 நாட்களில் இயக்கப்பட்ட ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். விமானம் மூலமாகவும் ஆயிரக்கணக்கானோர் புறப்பட்டு சென்றுள்ளனர். இவ்வாறு கடந்த 2 நாட்களில் பேருந்து, ரயில், விமானங்கள் ஆகிய பொது போக்குவரத்து சேவைகள் மூலம் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
தென்மாவட்டங்களுக்கு படையெடுக்கும் மக்களால் விக்கிரவாண்டி சுங்கச் சாவடியில் மட்டும் ஒரு லட்சத்து 2 ஆயிரம் வாகனங்கள் கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ஏராளமானோர் நேற்று புறப்பட்டதால் தாம்பரம் ஜிஎஸ்டி சாலை உட்பட பல்வேறு சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இன்றும் முக்கிய சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
-
கிளாம்பாக்கத்தில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. முதல்வர் விஜய்க்கு பொதுமக்கள் வைத்த கோரிக்கை -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications