பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது.. ஆர்வத்துடன் தேர்வு எழுதி வரும் மாணவர்கள்!

தமிழகம் மற்றும் புதுவையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் தேர்வை எழுதி வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் தேர்வை எழுதி வருகின்றனர். தமிழ்நாடு மற்றும் புதுவையில் மாணவ மாணவிகள் 8 லட்சத்து 51 ஆயிரத்து 303- பேரும் தனித்தேர்வர்களாக 23 ஆயிரத்து 747- பேரும் என மொத்தம் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 பேர் எழுதுகின்றனர்.

2022-23-ம் கல்வி ஆண்டு 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது.

இந்த தேர்வுகளை தமிழ்நாடு மற்றும் புதுவையில் மாணவ மாணவிகள் 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 பேரும் தனித்தேர்வர்களாக 23 ஆயிரத்து 747 பேரும் என மொத்தம் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 பேர் எழுதுகின்றனர்.

மின் தட்டுப்பாடு ஏற்படாத வகையில்

மின் தட்டுப்பாடு ஏற்படாத வகையில்

மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக தமிழ்நாடு மற்றும் புதுவையில் 3, 225 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு நடைபெறும் இடங்களில் மின் தட்டுப்பாடுகள் ஏற்படாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று மின்சார வாரியத்திற்கு அமைச்சர் அறிவுறுத்தியிருந்தார். அதேபோல் குடிநீர் வசதி போன்றவையும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. தேர்வு அறை கண்காணிப்பாளர் 46,870 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 காப்பி அடிப்பதை தடுக்க

காப்பி அடிப்பதை தடுக்க

மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க பறக்கும் படை, நிலையான படை உறுப்பினர்கள் என மொத்தம் 4,235 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு புகைப்படம், பதிவு எண், பாடம் உள்ளிட்ட விவரங்களை கொண்ட முகப்புத்தாள்களுடன் விடைத்தாள்கள் வழங்கப்படும் என்றும், மாணவ மாணவிகள் அதனை சரிபார்த்த பின்னர் கையெழுத்திட்டு தேர்வு எழுத தொடங்க வேண்டும் என்று கல்வித்துறை தெரிவித்து இருந்தது.

பொதுத்தேர்வு தொடங்கியது

பொதுத்தேர்வு தொடங்கியது

அதன்படி இன்று காலை 10 மணிக்கு பொதுத்தேர்வு தொடங்கியது. தமிழ் தாள் தேர்வு தொடங்கியது. மாணவர்கள் தேர்வு எழுதி வருகின்றனர். முதல் 10 நிமிடங்கள் வினாத்தாளை படித்து பார்ப்பதற்காகவும், அடுத்த 5 நிமிடங்கள் தேர்வர்களின் தேர்வு விவரங்களை சரிபார்ப்பதற்கும் அடுத்த 3 மணி நேரம் தேர்வை எழுதுவதற்கும் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 1.15 மணி வரை தேர்வு முடிகிறது. வரும் புதன்கிழமை ஆங்கில தேர்வு நடைபெறுகிறது.

மே 5 ஆம் தேதி தேர்வு முடிவுகள்

மே 5 ஆம் தேதி தேர்வு முடிவுகள்

அடுத்த மாதம் 3-ந் தேதி வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் ஆகிய தேர்வுகளுடன் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு பெற இருக்கிறது. தேர்வு முடிந்த பிறகு அடுத்த மாதம் 10-ந் தேதியில் இருந்து 21-ந் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறுகிறது. விடைத்தாள் திருத்தும் பணியில் 48 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். ஏற்கனவே அறித்தபடி மே 5 ஆம் தேதி தேர்வு முடிவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+