சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எபிசென்டரான கோயம்பேடு சந்தையிலிருந்து கடலூர் திரும்பிய 8 பேருக்கு கொரோனா

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையிலிருந்து கடலூர் திரும்பிய 8 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Recommended Video

    வேலையை காட்டிய பேனிக் பையிங்... சென்னையை மிரட்டும் கொரோனா

    கடலூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சென்னை கோயம்பேட்டில் ஏராளமானோர் பணியாற்றி வருகிறார்கள். கோயம்பேட்டிலிருந்து 700 தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு வந்தனர்.

    அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 500 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. இந்த நிலையில் சென்னை கோயம்பேட்டில் காய்கறிகளை விற்றுவிட்டு கடலூர் திரும்பிய 8 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

    கொரோனா பாதிப்பு.. இன்று 4 மாவட்டங்களில் ஒரு நாள் முழு ஊரடங்கு.. அத்தியாவசிய கடைகள் மூடல் கொரோனா பாதிப்பு.. இன்று 4 மாவட்டங்களில் ஒரு நாள் முழு ஊரடங்கு.. அத்தியாவசிய கடைகள் மூடல்

    19 பேருக்கு கொரோனா

    19 பேருக்கு கொரோனா

    மிகப் பெரிய காய்கறி சந்தையான கோயம்பேடு சந்தை இன்று ஒரு கிளஸ்டராக மாறி பலருக்கு கொரோனாவை பரப்பி வருகிறது. கோயம்பேடு சந்தையிலிருந்து அரியலூர், பெரம்பலூர் வந்த 20 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அது போல் அரியலூர் வந்த 19 பேருக்கும் பெரம்பலூர் வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

    96 பேர்

    96 பேர்

    கோயம்பேட்டிலிருந்து கடலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு யாரெல்லாம் திரும்பினார்கள் என்பது குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. மேலும் கோயம்பேட்டில் காய்கறி வாங்க சென்றவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அது போல் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 7 பேருக்கு நேற்று கொரோனா உறுதியானது. இதுவரை கோயம்பேடு மார்க்கெட் மூலம் தமிழகம் முழுவதும் 96 பேருக்கு கொரோனா பரவியுள்ளது.

    பூ விற்பவர்கள்

    பூ விற்பவர்கள்

    அது போல் கோயம்பேடு பூக்கடைகளும் கொரோனா பரப்பும் மையமாகியுள்ளன. இங்குள்ள கடைகளில் பணியாற்றிய 9 பேருக்கு கொரோனா வந்துள்ளது. இவர்கள் மூலம் அவர்களின் குடும்பத்தினருக்கும் கொரோனா பரவத் தொடங்கிவிட்டது. அது போல் வடபழனி கோயில் வாசலில் பூ விற்ற 6 பேருக்கு கொரோனா உறுதியானது.

    பூக்களை கொடுத்தவர்கள்

    பூக்களை கொடுத்தவர்கள்

    மக்கள் வெளியே வராததால் இவர்களே வீடு வீடாக சென்று பூக்களை கொடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படி இவர்கள் எங்கெங்கு சென்று பூ விற்பனை செய்தார்கள் என்பது தெரியவில்லை. கோயம்பேடு சந்தையில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் சமூக விலகலை கடைப்பிடிக்கவும் அங்கிருந்த மார்க்கெட் மாதவரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    English summary
    8 returned from Koyambedu market to Cuddalore has infected with corona. This makes people pandemic.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X