8 வருடங்கள் நரக வேதனை.. பிக்பாஸ் போனது பெரிய தப்பு..! கண்ணீர் விட்ட நடிகர் சக்தி
சென்னை: சில ஆண்டுகளாக மன உளைச்சலால் வீட்டுக்குள்ளாகவே முடங்கிக் கிடந்த இயக்குநர் வாசுவின் மகன் சக்தி, மனம் திறந்து தான் சந்தித்த கஷ்டங்களை வெளிப்படையாகப் போட்டு உடைத்துள்ளார்.
இயக்குநர் பி வாசு படங்களை யாராலும் எளிதில் மறக்கவே முடியாது. அவர் இயக்கிய சின்னத் தம்பி சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. குஷ்பு மற்று பிரபு ஜோடிக்கு அந்தப் படம் மறக்க முடியாத அக்மார்க் முத்திரையை உருவாக்கிக் கொடுத்தது. அதைப்போல ரஜினி நடித்த 'மன்னன்' , 'சந்திரமுகி' ஆகிய படங்கள். இதில் சந்திரமுகியின் வெற்றி இமாலய வெற்றி. இப்போதும் அந்தப் படத்தில் வரும் வடிவேலுவின் காமெடி காட்சிகள் மீம்ஸ் போட்டு ஆடியன்ஸ் பறக்கவிட்டு வருகிறார்கள். அஜித்தை வைத்து இவர் இயக்கிய 'பரமசிவன்' எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை.

அடுத்து இவரது மகன் சக்தியை நடிகராக அறிமுகமாக்கினார். அவரும் வந்த வேகத்தில் சில வாய்ப்புகளைப் பெற்றார். ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு ரசிகர்கள் மனதில் இவர் வில்லனாக தோன்ற ஆரம்பித்தார். அடுத்து மது அருந்திவிட்டு காரை விபத்துக்குள்ளாக்கினார் என்ற புகாரில் சிக்கினார். சில ஆண்டுகள் அப்படியே முடங்கிப் போனார்.
சக்திக்கு என்ன ஆனது? அவர் சொந்த வாழ்க்கையில் சந்தித்த துயரம் என்ன என்பது பற்றி எதுவும் தெரியவில்லை. இப்போது நெருக்கடியிலிருந்து மீண்டு வந்த சக்தி, ஒரு யூடியூப் தளத்திற்கு மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார் . அந்தப் பேட்டியில் சக்தி, "சின்ன வயதிலிருந்தே நான் தோல்வியைப் பார்த்ததே இல்லை. கொஞ்சம் வசதியான வீட்டுப் பையனாகவே வளர்ந்துவிட்டேன். எதிலுமே நான் ஃபெயில் ஆனது கிடையாது. நன்றாக எம்பிஏ வரை படித்தேன்.
அதற்கு நேரெதிராக இருந்தது எனது சினிமா வாழ்க்கை. சினிமாவை தொழிலாக எடுத்த பிறகு பல தோல்விகளைச் சந்தித்தேன். தோல்வி என்றால் என்ன என்பதே எனக்குத் தெரியாது. எனது 30 ஆண்டுகால சந்தோஷமான வாழ்க்கையை இந்த 8 வருடங்கள் அப்படியே புரட்டிப் போட்டுவிட்டன. நான் ஒரு கெட்டவனாகப் பல இடங்களில் சித்திரிக்கப்பட்டுள்ளேன்.
ஒருத்தன் தப்பு செய்கிறான் என்றால், அவன் திமிரினால் செய்வான். எனக்கு திமிரே இருந்தது இல்லை. நான் யார் வம்புக்கும் போகமாட்டேன். ஒருவர் என்னிடம் தவறாக நடந்து கொண்டால் என் உண்மையான முகத்தைக் காட்டவும் தயங்கமாட்டேன். நான் ஒரு சர்ச்சையில் கூட சிக்கினேன். நிறைய பேர் கதவைப் பூட்டி வைத்துக் கொண்டு செய்வதை நான் திறந்து வைத்துச் செய்தேன். அவ்வளவுதான் வித்தியாசம். அதைச் செய்யாதவன் யாரும் கிடையாது. நான் கதவைத் திறந்து வைத்துச் செய்ததால் சிலர் ரூமுக்குள் கேமிராவுடன் வந்துவிட்டார்கள். அதற்கு நான் ஒன்றுமே செய்ய முடியாது. ஏனென்றால் அதுதான் அவர்களுக்குச் சாப்பாடு.
நான் நல்லவன் என்று பெயர் எடுத்திருக்கிறேன். நல்ல 'குடி'மகன் என்று பெயர் எடுத்திருக்கிறேன். பிக்பாஸ் பார்த்துவிட்டு இவன் பெண்களை மதிக்கத் தெரியாதவன் என்று பெயர் எடுத்திருக்கிறேன். கெட்டவன் என்றும் சிலர் சொல்லி இருக்கிறார்கள். இனிமேல் வேறு எந்தப் பெயரையும் வாங்க வேண்டியது இல்லை. கடந்த 10 வருடங்களில் எல்லா பெயரையும் வாங்கிவிட்டேன். எங்க அப்பா அந்த ஷோவுக்கு போகவே வேண்டாம் என்றார். நான் தான் விடாப்பிடியாகப் போனேன். நான் பிக்பாஸ் பார்த்ததே இல்லை. அதனால் அதன் ஆழம் தெரியாமல் போய்விட்டேன். அது நான் எடுத்த தவறான முடிவு.
இங்கே மூன்று காரணத்திற்காகக் குடிக்கிறார்கள். பணத் திமிரில் குடிப்பவர்கள். வேலைக்குச் செய்த களைப்பு தெரியாமல் இருக்கக் குடிப்பவர்கள். மன உளைச்சலுக்காகக் குடிப்பவர்கள். பணத் திமிரில் குடிப்பவன் மறுநாள் அதை மறந்துவிடுவான். வேலைப் பளு மறக்கக் குடிப்பவன் சந்தோஷமாக ஒருநாள் இருந்துவிட்டு, மறுநாள் வேலைக்குப் போய்விடுவான். இங்கே மன உளைச்சலால் குடிப்பவன் அதை நிறுத்துவது கடினம்.
நான் பணத் திமிரில் குடிக்கவில்லை. என் சந்தர்ப்ப சூழ்நிலை, பிரச்சினைக்காகக் குடித்தேன். அது என்ன பிரச்சினை என்பது என் குடும்பத்திற்குத் தெரியும், அந்தக் கடவுளுக்குத் தெரியும். என் குடும்பத்திற்காக அதை விட்டு வெளியே வந்துவிட்டேன். நான் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பின் சில பிரச்சினைகளால் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தேன். 2 வருடம் முன்பு ரஜினி ஒருமுறை அப்பாவுக்குப் போன் பண்ணார். அப்போது என்னைப் பற்றி விசாரித்தார். அவர் மன கஷ்டத்தை சொன்னதுடன் என்னிடம் பேசினார். 'இந்த சறுக்கல் எல்லா நடிகர்களின் வாழ்க்கையிலும் நடந்துள்ளது. என் வாழ்க்கையிலும் நடந்துள்ளது. நீ திரும்ப வருவ. உடனே வீட்டுக்கு வா.. நாம் சந்திப்போம்' என்றார்.
அவர் உயரத்திற்கு என்னை அழைத்துப் பேச வேண்டிய தேவையே இல்லை. அவர் எனக்கு ஆறுதல் சொன்னார். அவரிடம் நான், 'நான் கமல் ரசிகன். ஆனால் உங்கள் வீட்டுப் பிள்ளை' என்றேன். இப்போது பிரச்சினைகளிலிருந்து வெளியே வந்துவிட்டேன். எனக்கு உலகம் என்ன என்பது தெரியும். முன்பு நடிக்கத் தெரியாமல் இருந்தேன். அதனால்தான் பிக்பாஸ் பிரச்சினையானது. நிஜ வாழ்க்கையில் நடிக்கத் தெரிந்தவனாக இருந்தால் வெற்றி பெற்று இருப்பேன். நான் செய்தது தவறு என்றால் மக்கள் முன்னால் மன்னிப்பு கேட்கத் தயங்கவே மாட்டேன். கட்டாயம் மன்னிப்பு கேட்பேன்" என்று பேசி இருக்கிறார்.
மகன் பட்ட துயரத்தைப் பற்றி இயக்குநர் வாசு பேசுகையில், "நான் சந்திக்காத பல பிரச்சினைகளை என் பிள்ளைகள் சந்திக்கிறார்கள். அவர்களின் உலகம் எனக்குப் புரியவில்லை. பல நாட்கள் மன கஷ்டத்தை அடக்கி அடக்கி உள்ளே வைக்க முடியாமல் பாத்ரூமில் போய் வெடித்து அழுது இருக்கிறேன்" என்று பேசி இருக்கிறார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications