சென்னை டூ பல்வேறு நகரங்களுக்கிடையே.. இன்று 80 விமானங்கள் இயக்கம்.. !
சென்னை: சென்னைக்கும் பல்வேறு நகரங்களுக்கும் இடையே இன்று 80 விமானங்கள் இயக்கப்படவுள்ளதாக சென்னை விமான நிலைய தகவல் குறிப்பு தெரிவிக்கிறது.
லாக்டவுன் சமயத்தில் ஒரே நாளில் அதிக அளவிலான விமானங்கள் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இயக்கப்படுவது இதுவே முதல் முறை என்றும் தெரிகிறது. இதனால் சென்னை விமான நிலையம் படு பிசியாக இருக்கிறது.

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்தபடியே உள்ளது. குறைவதாக தெரியவில்லை. குறிப்பாக சென்னையிலும், அதன் அண்டை மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு நீடித்தபடியே உள்ளது. எந்த வித குறைவும் இல்லை. பலி எண்ணிக்கையும் சீரான அளவில் இருந்து கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில் இன்று சென்னையிலிருந்து பல்வேறு நகரங்களுக்கு 80 விமானங்கள் இயக்கப்படவுள்ளன. இதில் சென்னையிலிருந்து செல்லும் விமானங்கள் 40 ஆகும். மற்ற 40ம் சென்னைக்கு பல்வேறு நகரங்களிலிருந்து வரும் விமானங்கள் ஆகும்.
ஹைதராபாத், பெங்களூர், திருவனந்தபுரம், மும்பை, டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்கள் இதில் அடக்கம்.












Click it and Unblock the Notifications