Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஸ்டிரைக்".. அரிசிக்கும் ஜிஎஸ்டியா.. 8000 அரிசி ஆலைகள் நாளை தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம்

தமிழகம் முழுவதும் நாளை அரிசி ஆலைகள் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளன

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரிசிக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரிவிதிப்பதை எதிர்த்து 8,000-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள், 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிசி விற்பனை கடைகளை அடைத்து நாளை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளன.

மத்திய அரசு சார்பில் உணவுப் பொருளான அரிசி, கோதுமைக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு உள்ளது. இந்த வரிவிதிப்பை கண்டித்து பல்வேறு அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில், அரிசி ஆலை உரிமையாளர்களும் ஸ்டிரைக் அறிவித்துள்ளனர்.. தமிழகம் முழுவதும் நாளை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போகிறார்களாம்..

 சியாமளநாதன்

சியாமளநாதன்

இது குறித்து சேலம் மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர் சங்க தலைவர் சியாமளநாதன் செய்தியாளர்களிடம் சொன்னதாவது: எப்போதுமே, உணவு பொருட்களுக்கு வரி உயர்வு என்பது இருக்கக்கூடாது.. காரணம், இதன் மீது வரி விதித்தால், ஏழை எளிய மக்கள் தான் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள்... நம் நாட்டை பொறுத்தவரை, 80 சதவீதம் பேர் ஏழை நடுத்தர மக்கள் தான்.. இதுநாள் வரை, அரிசிக்கு எந்த அரசும் வரியை விதித்தது கிடையாது... ஆனால், மத்திய அரசு 5 சதவீதம் ஜிஎஸ்டியை இப்போது விதித்துள்ளது. இந்த வரி வருகிற 18-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

 வர்த்தகம்

வர்த்தகம்

தமிழகத்தில் மொத்தம் 8000 அரிசி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.. இந்த அரிசி ஆலைக்கு கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நெல் மூட்டைகள் அரவைக்கு வருகிறது. இந்த வகையில் நாள் ஒன்றுக்கு அரிசி ஆலைகளில் 20 ஆயிரம் டன் அரிசி உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் ரூ.300 கோடி அளவுக்கு வர்த்தகம் நடக்கிறது... எனவே, அரிசியின் மீதான 5 சதவீத ஜிஎஸ்டியை நீக்க கோரி நாளை அரிசி ஆலை உரிமையாளர்கள் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

பாதிப்பு

பாதிப்பு

அரிசி மீதான ஜிஎஸ்டி வரிக்காக எங்கள் போராட்டம் தொடரும்... எனவே, மத்திய அரசு உடனடியாக 5 சதவீதம் ஜிஎஸ்டியை திரும்ப பெற வேண்டும்.. இந்த போராட்டத்தால் தமிழக முழுவதும் 8000 ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், அதனை சார்ந்த லாரி உரிமையாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், அரிசி வணிகர்கள், அரிசி வணிகத்தைச் சார்ந்த தொழிலாளர்கள் என்று கிட்டத்தட்ட 5 லட்சத்திற்கும் மேல் பாதிக்கப்படுவார்கள்" என்றார்.

 ஸ்டிரைக்

ஸ்டிரைக்

அதேபோல, தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எம்.சிவானந்தன், திருச்சியில் செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "நம் நாட்டில் அரிசிதான் ஏழை, நடுத்தர மக்களின் தினசரி பிரதான உணவு... அப்படி இருக்கும், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு மத்திய அரசு5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பது ஏற்புடையது கிடையாது.. இதனால், அரிசி கிலோவுக்கு ரூ.2 முதல் ரூ.3 வரை விலை உயரும்.. எனவே, இந்த வரி விதிப்பை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் உள்ள அரிசி ஆலைகள் சார்பில் வரும் 16-ம்தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்" என்றார்.

 லீ பஜார்

லீ பஜார்

அதுபோல் சேலம் லீ பஜார் வர்த்தக சங்கத்தின் தலைவர் ஹரிஹரன் பாபு சொல்லும்போது, உணவு பொருட்களுக்கு இதற்கு முன்பு ஜிஎஸ்டி விதிக்கப்படவில்லை... உணவுப் பொருட்கள் மீது வரி போட்டால் அது பொதுமக்களை பாதிக்கும். உணவு பொருட்கள் மீதான 5 சதவீதம் ஜிஎஸ்டியை கண்டித்து அகில இந்திய அளவில் நாளை வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது .நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் இன்றும், நாளையும் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது . சேலத்தில் லீ பஜார் வர்த்தக சங்கத்தினர் நாளை கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.. சுமார் 300 கடைகள் அடைக்கப்படுகிறது" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+