தமிழகத்தில் ஒரே நாளில் மேலும் 811 பேருக்கு கொரோனா.. சென்னையில் எவ்வளவு பேருக்கு பாதிப்பு தெரியுமா?
சென்னை: தமிழகத்தில் மேலும் 811 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 23 ஆயிரத்து 181 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Recommended Video

தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்த நிலையில், தினமும் மாலையில், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் மேலும் 811 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, இதன் மூலம் மொத்த பாதிப்பு 8,23,181 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 943 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் இதுவரை 8,03,328 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 12,188 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று ஒரே நாளில் 228 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 2,26,937 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 1,45,66,511 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 63,582 மாதிரிகளை, கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 242 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் அரசு சார்பிலான மையங்கள் எண்ணிக்கை 68 ஆகும். தனியார் மையங்கள் 174 என்ற அளவில் உள்ளன.
-
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங்












Click it and Unblock the Notifications