தமிழக ஆளுநர் மாளிகையில் 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. ஆளுநர் மாளிகை விளக்கம்
சென்னை: தமிழக ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு வீரர்கள், தீயணைப்பு வீரர்கள் உள்பட 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆளுநர் மாளிகை கிண்டி சர்தார் படேல் சாலையில் உள்ளது. பல 100ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அந்த மாளிகையில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். இந்நிலையில் ஆளுநர் மாளிகை ஊழியர்கள் 147 பேருக்கு கொரோனா தொற்றுப் பரிசோதனை அண்மையில் நடத்தப்பட்டது. இதில் 84 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், சென்னையில் உள்ள ராஜ் பவனில் ஒரு சில நபர்களுக்கு அறிகுறிகள் காட்டியதைடுத்து வளாகத்தில் பணிபுரிந்த 147 நபர்களுக்கு சோதனை நடத்தப்பட்டது. இதில் பாதுகாவலர்கள், தீயணைப்பு வீரர்கள் உள்பட 84 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது சுகாதாரத் துறையால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இவர்கள் அனைவரும். ராஜ் பவன் கட்டிடத்திற்கு வெளியே பணிபுரிந்து வந்தனர். இந்த நபர்கள் யாரும் ஆளுநர் அல்லது ராஜ் பவனின் மூத்த அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ளவில்லை, "என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அலுவலகங்கள் உட்பட முழுப் பகுதியும் மாநகராட்சி பணியாளர்களால் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications