சென்னை அம்பத்தூரே ஆடிப்போச்சு! ஆந்திரா லாரியில் மூட்டை மூட்டையாக சிக்கிய 845 கிலோ கஞ்சா.. பரபர தகவல்
சென்னை: திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் அருகே அய்யப்பாக்கத்தில் 845 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஆந்திரா மாநிலத்தில் இருந்து வந்த கண்டெய்னரில் இந்த கஞ்சா கடத்தி வரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசும் போதைப்பொருள் நடமாட்டத்தை கண்காணித்து அதனை வேரோடு அழித்து வருகின்றனர். மேலும் போதை பொருள் கடத்தப்படுவதை ரகசியமாக கண்காணித்து வருகிறார்கள்.

அந்த வகையில் இன்று அம்பத்தூர் அருகே கஞ்சா கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, இன்று திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் அருகே அய்யப்பாக்கத்தில் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்திக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த கண்டெய்னர் லாரியை மறித்து அதில் சோதனையிட்டுள்ளனர்.
இதில் அந்த கண்டெய்னர் லாரியில் மூட்டை மூட்டையாக 845 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 845 கிலோ கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த கண்டெய்னர் லாரி ஆந்திரா மாநிலத்தில் இருந்து வந்ததாகவும், அங்கு இருந்து தான் இந்த கஞ்சா கடத்தி வரப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications