தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஓராண்டு செயல்பாடுகள்- 85% பேர் ஆதரவு- ஐ.ஏ.என்.எஸ்.- சிவோட்டர் சர்வே

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பாடுகள் மீது 85% பேர் திருப்தி தெரிவித்துள்ளதாக ஐ.ஏ.என்.எஸ்.- சி வோட்டர் சர்வே தெரிவித்துள்ளது.

2021-ம் ஆண்டு தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் புதிய அரசுகள் அமைந்து ஓராண்டை கடந்த நிலையில் அதன் செயல்பாடுகள் தொடர்பாக ஐ.ஏ.என்.எஸ்- சி வோட்டர் ஆய்வு ஒன்றை நடத்தியது.

85% TN voters satisfied with CM Stalin and DMK Govt: IANS- C Voter Survey

தமிழக முதல்வர், தமிழக அரசின் செயல்பாடுகள், பிரதமர் மோடியின் செயல்பாடுகள், பிரதமர் பதவிக்கு யாருக்கு ஆதரவு ஆகியவை தொடர்பாக ஐ.ஏ.என்.எஸ்- சி வோட்டர் நடத்திய ஆய்வு முடிவுகள் விவரம்:

இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பாடுகள் மிகவும் திருப்தி என 41% பேரும்; 44% பேர் திருப்தியாக இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளனர். மொத்தம் 85% பேர் முதல்வர் ஸ்டாலின் செயல்பாடுகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மொத்தம் 17%க்கும் குறைவானவர்களே தமிழக அரசின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை என கூறியுள்ளனர்.

மேலும் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் மிகவும் திருப்தி என 30% பேரும் திருப்தி அளிப்பதாக 50% பேரும் தெரிவித்துள்ளனர். மொத்தமாக தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு 81% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் 13%க்கும் குறைவானவர்களே தமிழக அரசின் செயல்பாடுகள் திருப்தி இல்லை எனவும் தெரிவித்திருக்கின்றனர்.

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாயின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை என 35% பேர் கூறியுள்ளனர். எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் திருப்தி தருவதாக 10% பேர் மட்டுமே கூறியுள்ளனர்.

பிரதமர் மோடியின் செயல்பாடுகளுக்கு தமிழகத்தில் ஆதரவு கிடைக்கவில்லை. தமிழகத்தில் 17% பேர்தான் பிரதமர் மோடியின் செயல்பாடுகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 40% பேர் பிரதமர் மோடியின் செயல்பாடுகள் திருப்தி இல்லை எனவும் 40% பேர் பிரதமர் மோடியின் செயல்பாடுகள் திருப்தி தருவதாகவும் கூறியுள்ளனர்.

தமிழகத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பிரதமராக அமோக ஆதரவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஐ.ஏ.என்.எஸ். சி வோட்டர் சர்வே தெரிவிக்கிறது. தமிழகத்தில் ராகுல் காந்தி பிரதமராக 54% பேரும் பிரதமராக மோடியே நீடிக்க 32% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+