சென்னை மெட்ரோ ரயில்களில் பிப்ரவரியில் 86.65 லட்சம் பயணிகள் பயணம்.. முழு புள்ளி விவரங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் பேருந்து போக்குவரத்தை அடுத்த சில ஆண்டுகளில் மெட்ரோ ரயில் போக்குவரத்து முந்துவதற்கு வாய்ப்பு உள்ளது. ஏனெனில் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை அந்த அளவிற்கு மக்களுக்கு முக்கிய பங்காற்றி வருகிறது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மக்கள் விரைவாக செல்வதற்காகவும் மெட்ரோ ரயில் வரப்பிரசாதமாக உள்ளது.

சென்னையில் தற்போது பரங்கிமலை -சென்ட்ரல், விமான நிலையம் டூ விம்கோ நகர் என இரு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் ஓடுகிறது. இந்த வழித்தடத்திற்கு கிடைத்த வரவேற்பு காரணமாக மேலும் மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில் ஓடப்போகிறது. அனேகமாக 2027ம் ஆண்டுக்குள் அனைத்து மெட்ரோ ரயில் வழித்தடத்திலும் ரயில்கள் ஓடத்தொடங்கும் என தெரிகிறது. அதன் பின்னர் மெட்ரோ ரயிலில் செல்வதையே விரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Chennai metro chennai train

தற்போது சென்னை மெட்ரோ ரயிலில் திணமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணிக்கிறார்கள். சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒவ்வொரு மாதமும் பயணிகள் எண்ணிக்கை குறித்து தகவல் வெளியிடுவது வழக்கம். அதன்படி 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 86,65,803 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது. இது தற்போது மிக முக்கியமான போக்குவரத்தாக இருந்து வருகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 86,65,803 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளனர்.

நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 86,99,344 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 07.02.2025 அன்று 3,56,300 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

2025, பிப்ரவரி மாதத்தில் மட்டும் பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 14,80,150 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 936 பயணிகள், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 6,046 பயணிகள், க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 37,56,385 பயணிகள் (Online QR 1,52,615; Paper QR 18,34,474; Static QR 2,68,084; Whatsapp - 6,14,516; Paytm 4,18,839; PhonePe - 3,40,151; ONDC - 1,27,706), சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 34,22,286 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), Whatsapp, Paytm App,PhonePe மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற அனைத்து வகையான பயணச்சீட்டுகளுக்கும் 20%கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாக மற்றும் Paytm App மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை பெற்றுகொள்ளலாம்" இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+