தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை.. எங்கெல்லாம் பெய்யும்?
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. முக்கியமாக டெல்டா மாவட்டங்களில் கடந்த 2-3 தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று 9 மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சேலம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல், ஆகிய மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் நீலகிரி மற்றும் கோவை மாவட்டம் அருகே தீவிர கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் கடலோர மாவட்டங்களில் தீவிர காற்றுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
அதோடு வங்க கடலில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு கடலுக்கு செல்வது பாதுகாப்பானது கிடையாது என்று வானிலை மையம் கூறியுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் ஒரு சில பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இல்லை, சென்னையில் மாலைக்கு பின் வானம் மேக மூட்டதோடு காணப்படும் .
-
ஏற்கனவே அவிஞ்சு போய் கிடக்கு.. மேற்கொண்டு வெறியைக் கிளப்பும் எல்-நினோ! ஆகஸ்ட் வரை வெயில் தானாம்! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. விடாமல் வெளுக்க போகுது மழை.. வானிலை மையம் எச்சரிக்கை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு?












Click it and Unblock the Notifications