ரயில் பயணிகளுக்கு ஒரு நற்செய்தி.. ஜூலை 18 முதல் எக்ஸ்பிரஸ் ரயில்களில் நடக்கும் முக்கிய மாற்றம்
சென்னை: இனி இந்த 9 எக்ஸ்பிரஸ் ரயில்கள் முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: நெல்லை- பாலக்காடு - நெல்லை (வண்டி எண் 16791/ 16792) பாலருவி எக்ஸ்பிரஸ் குண்டாரா, கீழக்கடையம் ரயில் நிலையங்களில் ஜூலை 18ஆம் தேதி முதல் நின்று செல்லும்.

சென்னை எழும்பூர்- மதுரை (வண்டி எண் 12637) பாண்டியன் எக்ஸ்பிரஸ் மணப்பாறை ரயில் நிலையத்தில் ஜூலை 18 ஆம் தேதி முதல் நின்று செல்லும். சென்னை எழும்பூர்- ராமேஸ்வரம் (வண்டி எண் 22661) ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் மண்டபம் ரயில் நிலையத்தில் ஜூலை 18ஆம் தேதி முதல் நின்று செல்லும்.
அது போல் நெல்லை- பாலக்காடு செல்லும் வண்டி எண் 16791 பாலருவி எக்ஸ்பிரஸ் பாவூர்சத்திரம் ரயில் நிலையத்தில் ஜூலை 19ஆம் தேதி முதல் நின்று செல்லும். ராமேஸ்வரம் டூ பனாரஸ் வாராந்திர ரயில் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் ஜூலை 19 ஆம் தேதி முதல் நின்று செல்லும். இதன் வண்டி எண் 22535.
சென்னை எழும்பூர்- நெல்லை (வ.எண் 12631) நெல்லை எக்ஸ்பிரஸ் சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஜூலை 18 ஆம் தேதி முதல் நின்று செல்லும். கோவை- ராமேஸ்வரம் வாரத்திற்கு ஒரு முறை செல்லும் ரயில் சிவகங்கை ரயில் நிலையத்தில் ஜூலை 18ஆம் தேதி முதல் நின்று செல்லும். இதன் வண்டி எண் 16618 ஆகும். மேலும் சென்னை எழும்பூர்- தூத்துக்குடி (வண்டி எண் 12693) முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் திருமங்கலம் ரயில் நிலையத்தில் ஜூலை 18 ஆம் தேதி முதல் நின்று செல்லும்.
சென்னை- எழும்பூர்- கொல்லம்- சென்னை எழும்பூர் (வண்டி எண் 16101/16102) கொல்லம் எக்ஸ்பிரஸ் ஆரியங்காவு ரயில் நிலையத்தில் ஜூலை 18ஆம் தேதி முதல் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற் சொன்ன 9 ரயில்களும் முக்கியமான ரயில்கள் அந்த ரயில்கள் நிற்பதாக சொன்ன நிலையங்களும் முக்கியமானவை. இதனால் பயணிகள் மகிழ்ச்சியாக உள்ளனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications