இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி
டெல்லி: பாகிஸ்தானின் உளவுப்பிரிவான ஐஎஸ்ஐ மற்றும் மும்பை நிழல் உலக தாதா குழுக்களுடன் தொடர்பு கொண்ட 9 பயங்கரவாதிகளை டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு அதிகாரிகள் இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர். இவர்கள் டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களின் முக்கிய பகுதிகளிலும், பாதுகாப்பு படையினர் மீதும் தாக்குதல் நடத்த பெரிய சதித்திட்டம் தீட்டிய நிலையில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் டெல்லி, மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்பட பிற மாநிலங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர். இதில் சில வெளிநாட்டினரும் உள்ளனர். இவர்களின் பெயர், முகவரி, போட்டோக்களை போலீசார் இன்னும் வெளியிடவில்லை. இவர்கள் பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ உளவுப்பிரிவான ஐஎஸ்ஐ மற்றும் மும்பை நிகல் உலக தாதாக்களின் வழிக்காட்டுதல்படி செயல்பட்டு வந்துள்ளனர். நம் நாட்டின் பாதுகாப்பை சீர்க்குலைப்பதை மையப்படுத்தியே இவர்கள் செயல்பட்டு வந்துள்ளனர். இவர்கள் பற்றிய ரகசிய தகவல்கள் கிடைத்த நிலையில் இன்று 9 பயங்கரவாதிகளும் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளன.
கைதானவர்களிடம் இருந்து அதிநவீன துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர்களுடன் தொடர்பு கொண்டவர்கள் நாட்டின் பிற பகுதகிளில் இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இதுபற்றி தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கைது நடவடிக்கையை தொடர்ந்து டெல்லி, மும்பை உள்பட நாட்டின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களுடன் தொடர்பில் இருந்த வெளிநாட்டு கும்பல்கள் யார்? பாகிஸ்தான் உளவுத்துறையுடன் இவர்களுக்கு எப்படி தொடர்பு ஏற்பட்டது? என்பது பற்றி காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications