விடாது "கருப்பு பூஞ்சை".. தமிழகத்தில் 921 பேருக்கு பாதிப்பு.. சென்னையில் 277 பேரை தாக்கிய தொற்று
தமிழகத்தில் 921 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்
சென்னை: தமிழகத்தில் 921 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கருப்பு பூஞ்சை தொற்று எவ்வாறு ஏற்படுகிறது, இதற்கு மாற்று சிகிச்சை, மாற்று மருந்து ஏதேனும் உள்ளதா போன்ற விவரங்களை அறிய 13 மருத்துவ வல்லுனர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது.
தொற்று காரணமாக ஏராளமானோர் இறந்து வருகின்றனர்.. அதனால்தான் தடுப்பூசியை பெரும் நம்பிக்கையுடன் மக்கள் செலுத்தி கொண்டு வருகிறார்கள்.
Recommended Video
எனினும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் உடலில் உள்ள நோய் எதிர்ப்பாற்றலே சில நேரங்களில் பிரச்சனையை உண்டு பண்ணிவிடுகிறது.. அவர்களுக்கு உடம்பில், எதிர்வினையாற்ற கூடிய நிலைமை ஏற்படுகிறது.. இதனால் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்குள்ளாக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது

எதிர்ப்பு சக்தி
இப்டிப்பட்ட நேரத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஸ்டீராய்டு போன்ற நோய் எதிர்ப்பாற்றலைக் குறைக்கும் மருந்துகள் வழங்கப்படும்.. ஒருவேளை சம்பந்தப்பட்ட நோயாளிகள் ஏற்கனவே நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவராக இருந்தால், அல்லது சர்க்கரை நோய் போன்ற நீண்ட நாட்களுக்கு நோய் பாதிப்புடையவராக இருந்தால், இந்த ஸ்டீராய்டு மருந்தின் எதிர்விளைவும் சேர்ந்து அவர்களுக்கு கருப்பு பூஞ்சை போன்ற நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது...

மூளை நரம்பு
இந்த கருப்பு பூஞ்சை நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டால், இதனால் கண், மூளை நரம்புகள் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. ஏற்கனவே தொற்றை கட்டுப்படுத்த போராடிக் கொண்டிருந்தால், இந்த கருப்பு பூஞ்சை நோய் மேலும் கிலியை ஏற்படுத்த தொடங்கியது.. அதனால்தான், கருப்பு பூஞ்சை நோயை தடுப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள 13 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது...

படுக்கைகள்
அதேபோல, இந்த நோய்க்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் "ஆம்போடெரிசின்-பி" என்ற மருந்தும் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன.. தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கைகள் கருப்பு பூஞ்சைக்காக அமைக்கப்பட்டுள்ளன... சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மட்டும் 312 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை 921 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிகிச்சை
அதில் 95 சதவீதம் பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதாகவும், சென்னையில் மட்டும் 277 பேர் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறுகிறார்கள்.. எனினும், அவர்களில் பலர் சிசிச்சை பெற்று குணமடைந்து வருவதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

நடவடிக்கை
இந்நிலையில், கருப்பு பூஞ்சை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் 2,470 ஆம்போடெரிசின் மருந்துகளை இதுவரை மத்திய அரசு தமிழகத்துக்கு ஒதுக்கியுள்ளதாகத் தெரிகிறது. இதைத் தவிர அவற்றை கூடுதலாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருப்பு பூஞ்சை
இதனிடையே, இந்த கருப்பு பூஞ்சை குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.. இந்த கருப்பு பூஞ்சை கொரோனா முதல் அலையிலேயே உயிர்களை பறிக்கத் தொடங்கி விட்டதாக ஒரு ஆய்வு கூறுகிறது.. ஆனால், 2வது அலையில்தான் அது விஸ்வரூபம் எடுத்துள்ளதாம். இதுகுறித்த தொடர் ஆய்வுகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications