லோக்சபா தேர்தல்.. தமிழக களத்தில் 932 வேட்பாளர்கள்.. 655 வேட்புமனுக்கள் டிஸ்மிஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தலுக்காக தமிழகத்தில் 932 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன என்று, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்தார்.

வேட்புமனு தாக்கல் பரிசீலனை நிறைவடைந்த நிலையில், நிருபர்களிடம் சத்யபிரதா சாஹூ இன்று அளித்த பேட்டி:

932 candidates in the fray for Lok sabha elections in Tamilnadu

லோக்சபா தேர்தலுக்கு தமிழகத்தில் மொத்தம் 1,587 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. 1587 வேட்பு மனுக்களில், 655 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 932 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. 18 தொகுதி இடைத்தேர்தலுக்காக 518 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் 305 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

தேர்தல் தொடர்பாக இதுவரை 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திமுக மீது 10, அதிமுக மீது 9, பாஜக மீது 2, பாமக மீது 3, மக்கள் நீதி மய்யம் கட்சி மீது 3 வழக்குகள் பதிவாகியுள்ளன. அமமுக-வுக்கு சின்னம் ஒதுக்குவது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும். அதுபற்றி நான் கூற முடியாது.

தமிழகத்தில் இதுவரை தேர்தல் தொடர்பான வாகன தணிக்கைகளில், ரூ 50.70 கோடி பணம், 223.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு சத்யபிரதா சாஹூ தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+