தமிழகத்தில் இதுவரை 93.75 லட்சம் பேருக்கு தடுப்பூசி: சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல்

தமிழகத்தில் இதுவரை 93.75 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இதுவரை 9,375 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

உலக நாடுகளையே கவ்வி பிடித்து வருகிறது கொரோனா வைரஸ்.. இதுவரை இதற்கு மருந்து கண்டுபிடிக்கப்பட முடியவில்லை... எனவே, தடுப்பூசி மட்டுமே இப்போதைக்கு ஒரே ஆறுதலாக இருந்து வருகிறது.

அந்த வகையில் தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள உலக நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன.. இந்தியாவிலும் ஜனவரி 16-ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.. முதன்முதலில் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.. இதையடுத்துதான் முதியவர்களுக்கும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசிகள் போடும் பணி ஆரம்பமானது..

9375 lakh people vaccinated in Tamilnadu sofar

இதற்கு பிறகு இளம்வயதினரையும் இந்த தொற்று பாதிக்கும் என்று விஞ்ஞானிகள் சொல்லி வந்ததால், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இந்த தடுப்பூசி போடும் பணி விரிவுபடுத்தப்பட்டது.

இதையடுத்து, இப்போது பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள ஆர்வம் காட்டி வருகிறார்கள்.. அரசு, தனியார் மருத்துவமனைகளில் தொடர்ந்து ஊசி போட்டுக் கொண்டும் வருகிறார்கள்.

அந்த வகையில், இதுவரை 93,75 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.. இவர்களில் 15.11 லட்சம் பேர் 44 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். நேற்று மட்டும் 2 லட்சத்து 89,430 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

மேலும் 45 வயதுக்குட்பட்ட 33.75 லட்சம் பேருக்கும், 60 வதை தாண்டிய முதியவர்கள் 26 லட்சம் பேருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது... அதேசமயம், தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்பட்டு வருகிறது..

ஆனால், தமிழகத்துக்கு 1 கோடிக்கு மேலான கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் இன்னும் 7.24 லட்சம் டோஸ்கள் பயன்படுத்தப்படாமல் மீதமிருப்பதாகவும் மத்திய அரசு அறிக்கை மூலம் நேற்றைய தினம் தெளிவுபடுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+