95%.. 2 அல்டிமேட் ஐடியா.. நம்பிக்கை நட்சத்திரம் டிடிவி தினகரன்.. எடப்பாடியின் கைக்கு செல்லும் அதிமுக
ஓபிஎஸ் இனியாவது டிடிவி தினகரனுடன் சேர்ந்து செயல்பட்டால் சிறப்பாக இருக்குமாம்
சென்னை: எடப்பாடி பழனிசாமி சமீபகாலமாக குஷியில் உள்ள நிலையில், நேற்றைய தினம், சுப்ரீம்கோர்ட் அளித்த தீர்ப்பும் கூடுதல் மகிழ்ச்சியை அவருக்கு ஏற்படுத்தி வருகிறது.. அப்படியானால் ஓபிஎஸ் என்ன செய்ய போகிறார்? அல்லது என்ன மாதிரியான முடிவுகளை எடுக்கலாம் என்பது குறித்த வாதங்கள் கிளம்பி உள்ளன.
அதிமுக அலுவலக சாவி வழக்கில், ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது..
மேலும் சாவியை எடப்பாடி தரப்புக்கு வழங்கியதை தவறு என்று சொல்ல இயலாது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அதற்கு பிறகு நீதிபதிகள் 2 முக்கியமான விஷயங்கள் குறித்து கேள்வி எழுப்பியதுடன், தங்கள் அதிருப்தியையும் நீதிமன்றத்தில் பதிவு செய்தனர்..

கீ யாருக்கு?
"ஒரு அரசியல் கட்சியின் அலுவலகத்தை சீலிடுவது என்பது சாதாரண விவகாரம் கிடையாது.. ஒருகட்சியின் இருதரப்பு மோதிக் கொள்கிறார்கள் என்றால் அது சட்டம் ஒழுங்கு சார்ந்த பிரச்சனை ஆகும். கட்சியின் அடிப்படை உறுப்பினராக இல்லாமல் எப்படி அலுவலகத்திற்கு உரிமை கோரமுடியும்?, என்று ஓபிஎஸ் தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்... அதுமட்டுமல்ல, மீண்டும் உரிமையியல் வழக்கு தொடர்ந்து, அலுவலகத்தின் சாவியை மீட்க, ஓபிஎஸ் தரப்பு சட்ட வழிகளை நாடலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்ததுடன், அலுவலக சாவியை எடப்பாடி தரப்பிற்கு வழங்கியது தவறில்லை என்று குறிப்பிட்டனர்.

சண்முகம்
இறுதியாக, மீண்டும் சிவில் சூட் போட்டு அலுவலகத்தை மீட்க சட்ட வழிகளை நாடலாமே? என்று நீதிபதிகள் ஓபிஎஸ் தரப்புக்கு அறிவுறுத்தினர். இந்த உத்தரவு எடப்பாடி தரப்புக்கு மேலும் உற்சாகத்தை தந்துள்ளது.. காரணம், இதன்மூலம் அதிமுக பொதுக்குழு ஓபிஎஸ்ஸை நீக்கியது செல்லும் என்ற உத்தரவை, நீதிமன்றமே ஏற்றுக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது.. அதனால், ஒருங்கிணைப்பாளர் பதவி ஓபிஎஸ் வசமில்லை என்றும், அதிமுகவில் அவர் உரிமை கோர முடியாது என்றும் எடப்பாடி தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.. ஆக மொத்தம் இது ஓபிஎஸ்ஸுக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டு வருகிறது.

ரத்தத்தின் ரத்தங்கள்
இதற்கு நடுவில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான சிவி சண்முகம், அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கும் நிலையை உருவாக்கியவர் ஓபிஎஸ்தான்.. அதிகார துஷ்பிரயோகம் செய்தவரும் ஓபிஎஸ்தான்.. அதிமுக அலுவலகத்தில் எங்கள் தரப்பிற்கு மட்டுமே முழு உரிமையிருக்கிறது என்று நம்பிக்கையுடன் கூறினார்.. இப்படி நேற்றைய தினம் ஒரே நாளில், 2 விதமான பின்னடைவுகள் ஓபிஎஸ்ஸுக்கு ஏற்பட்டுள்ள நிலையில், அவரது அடுத்தக்கட்ட நகர்வு என்னவாக இருக்க போகிறது என்பதே ரத்தத்தின் ரத்தங்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பிளான் - A
இதுகுறித்து அரசியல் நோக்கர்களிடம் நாம் கருத்து கேட்டோம்.. அவர்கள் நம்மிடம் சொன்னதாவது: "இனிமேல் கட்சி பிரச்சனையை நேரடியாகவே ஓபிஎஸ் இறங்கி சந்திக்க வேண்டும்.. இனியும் நீதிமன்றத்தை நம்பியிருக்க கூடாது.. தனிநிதிபதி ஜெயச்சந்திரன் அன்று தீர்ப்பினால்தான் கட்சியே இன்று முடங்கிபோய்விடும் நிலையில் உள்ளது.. அதனால், இனியும் இந்த மாதிரி அரசியலை, நீதிமன்றத்தில் செய்யாமல் மக்கள் மன்றத்தை ஓபிஎஸ் நடத்த வேண்டும்.. தன்னுடைய அரசியல் களத்தில் நின்று போராடி வெற்றி பெற வேண்டும்.. தற்சமயம் அவர்பக்கம் ஓரளவு செல்வாக்கே உள்ள நிலையில், தன்னை எந்த அளவுக்கு நிரூபிக்க போகிறார் என்பது சந்தேகம்தான்.

பிளான் - B
சசிகலாவுடன் ஓபிஎஸ் இணைந்தாலும் அதேதான்.. அந்தம்மாவுக்கென்று தனி செல்வாக்கு இன்று இல்லை.. ஓபிஎஸ் அரசியலுக்கு ஓரளவு தூண்டுகோலாக சசிகலா இருக்க முடியுமே தவிர, அவரை வெற்றி பெற வைக்க முடியாது.. அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன் என்று என்றைக்கு சசிகலா அறிவித்தாரோ, அன்றே இவர் மீதான நம்பிக்கை குலைந்துவிட்டது.. ஆனால், டிடிவி தினகரனுக்கு நல்ல செல்வாக்கு உள்ளது.. சரியாக அரசியல் செய்கிறார்.. சிறந்த முறையில் யோசிக்கிறார்.. அவர் அன்று தனிக்கட்சி ஆரம்பித்தது, இன்று மிகப்பெரிய பலமாக அவருக்கு உருவாகி உள்ளது.. அதனால் ஓபிஎஸ், இனியாவது டிடிவி தினகரனை சரியாக பயன்படுததி கொள்ள வேண்டும்.

பிளான் - C
அதிமுகவுக்கு ஓபிஎஸ் தலைமை என்பது, எடப்பாடி வலுவாக இருக்கும்போது எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை.. அதனால், டிடிவி தினகரனின் அமமுகவில் ஓபிஎஸ் + சசிகலா இருவருமே சேர்ந்து பயணிக்கும்போது, அதுவும் டிடிவியை தலைமை பொறுப்பில் அங்கீகரிக்கும்போது, ஓரளவு பலம் கிடைக்கும்.. எடப்பாடியையும் எதிர்க்க முடியும்.. சொந்த தொகுதியிலேயே செல்வாக்கை இழந்துள்ளார் ஓபிஎஸ்.. அந்த மண்டலத்தில் உள்ளவர் பெரும்பாலும், எடப்பாடி பக்கம் உள்ள நிலையில், ஓபிஎஸ், உடனடியாக டிடிவியுடன் இணைவது ஒன்றே அவருக்கான அரசியலாக இருக்கும்" என்றனர்.

லீலா பேலஸ்
அதுமட்டுமல்ல, தினகரன் மட்டுமே இப்போதைக்கு அதிமுகவின் வாக்குகளை பிரிக்கக்கூடியவராக இருக்கிறார்.. கடந்தமுறை தேர்தலில் 23 தொகுதிகளில் அமமுக வாக்குகளால்தான் அதிமுக தோற்றது. அமித்ஷா அன்று சென்னை வந்தபோது, லீலா பேலசில் பலமுறை சொன்னார்.. தினகரனை கூட்டணியில் வைத்து கொள்ளுங்கள், நான் 20 சீட்டுக்கு அவரை சம்மதிக்க வைக்கிறேன் என்றார்.. இதற்கு ஓபிஎஸ்ஸும் ஓகே சொன்னார்.. ஆனால், எடப்பாடி மட்டும் பிடிவாதம் பிடித்தார்.. டிடிவியுடன் அன்று கூட்டணி வைத்திருந்தால் 90 சீட்டுக்கு மேல் அதிமுக போயிருக்கும்.. ஜெயலலிதா சொல்வது போல், இன்று மைனாரிட்டி திமுக அரசாக இது இருந்திருக்கும்.. எனவே, இந்த முறையும் எடப்பாடி பழனிசாமியை தவிர்ப்பது நிச்சயம் என்றாலும், ஓபிஎஸ் அந்த வாய்ப்பை விட்டுவிடக்கூடாது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications