பண்ணை வீட்டில் என்ன நடந்தது தெரியுமா.. குருமூர்த்தியா.. ஓபிஎஸ்ஸை புட்டு புட்டு வைக்கும் எடப்பாடி டீம்
ஓபிஎஸ்ஸை அதிமுக தொண்டர்கள் வெறுக்க காரணங்கள் முன்வைக்கிறது எடப்பாடி டீம்
சென்னை: ஓபிஎஸ்ஸை அதிமுக தொண்டர்கள் வெறுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.. அதற்கு காரணம் ஓபிஎஸ் மட்டும்தான் என்று அடித்துசொல்கிறார்கள் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள்.
தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டச் செயலாளராக இருப்பவர் ஆதிராஜாராம்.. கட்சியில் சீனியரும்கூட.. இவர் தீவிரமான எடப்பாடி பழனிசாமியின் விசுவாசியும்.. இவர் "ஒன் இந்தியா" தமிழுக்கு சிறப்பு பேட்டி ஒன்றை தந்துள்ளார்.
அந்த பேட்டியின்போது, விஜயபாஸ்கர், வேலுமணியிடம் நேற்றைய தினம் நடந்த ரெய்டுகள், ஓபிஎஸ் அரசியல், ஒற்றை தலைமை விவகாரம் உள்ளிட்டவை குறித்து பல கேள்விகள் முன்வைக்கப்பட்டது. அதற்கு ராஜாராம் விலாவரியான பதில்களை தந்துள்ளார்.. குறிப்பாக, ஓபிஎஸ்ஸை எடப்பாடி டீம் ஏன் வெறுக்கிறது என்பது குறித்தும் ராஜாராம் தெளிவுபடுத்தி உள்ளார்.

விஜயபாஸ்கர்
"இந்த ரெய்டெல்லாம் கண்துடைப்பு.. விஜயபாஸ்கர் வீட்டில் எதுவும் இருக்காதுன்னு இவங்களுக்கும் தெரியும்.. ஆனாலும் ரெய்டு நடந்தது என்றால், அதற்கு காரணம் மக்களை திசை திருப்புவதற்காக செய்கிறது திமுக. ஒவ்வொரு முறையும் இப்படித்தான் செய்கிறார்கள்.. ரெய்டு நடக்கிறது என்றாலே திமுக தரப்பில் ஏதோ தவறு நடந்திருக்கிறது என்றுதான் அர்த்தம்.. மதுரையில் அமைச்சர் மூர்த்தி வீட்டு கல்யாணம் நடந்தது.. 120 கோடி ரூபாய்க்கு பிரம்மாண்டமாக செலவு செய்திருக்கிறார்கள்..

பிராமணர்கள்
அதேபோல மின்கட்டண உயர்வு.. அமலுக்கும் வந்துவிட்டது.. இவைகளை எல்லாம் மறைப்பதற்காக, மக்களை திசைதிருப்புவதற்காகவும், இந்த ரெய்டு நடக்கிறது. கேட்டால் நாங்கள் திராவிட மாடல் ஆட்சி என்கிறார்கள். யார் திராவிடர்? பெரியார் என்ன சொல்லியிருக்கார்? பிராமணர் அல்லாதவர்கள் திராவிடர்கள் என்கிறார்.. அப்படி பார்த்தால், டெல்லியில் பிரதமர் மோடிகூட பிராமணர் அல்லாதவர்தான்.. சமீபத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதிமுகவுக்குள்ளும் இப்படித்தான் ஊழல் குறைகளை சொல்லி கொண்டிருக்கிறார்கள் என்றால், அது உட்கட்சி பூசல்.. ஒருவரையொருவர் மண்ணை வாரி போட்டுக் கொள்வார்கள்.. ஆனால், திமுக செய்வது பழிவாங்கும் நடவடிக்கை.

ஹிந்த்துக்கள்
ஆ.ராசா என்ன பேசியிருக்கிறார்? இந்துக்கள் என்று சொல்பவர்கள் விபச்சாரின் மகன் என்று ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்கிறார்.. அப்படி பார்த்தால் முதல்வர் வீட்டில்கூட, கோயிலுக்கு போறாங்க.. 96 சதவீதம் எங்களிடம் இந்துக்கள்தான் இருக்கிறார்கள் என்று முதல்வரே சொல்கிறார்.. ஆ.ராசா சொல்வது இங்கு எடுபடுமா? ஜூலை 11ம் தேதி, தனி நீதிமன்ற நீதிபதி, பொதுக்குழுவை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை என்று அறிவிக்கிறார்.

எட்டி உதைத்தார்
அதேமாதிரி, அந்த பொதுக்குழுவுக்கு, ஓபிஎஸ்ஸுக்கும் அழைப்பு விடுத்து, அவருக்கும் சேர் போட்டு, பெயர் எழுதி அதில் ஒட்டி வைத்திருந்தார்கள்.. ஆனால், இவர் ஏன் தலைமைக்கழகம் அடியாட்களுடன் போனார்? ஊர்ல இருக்கிற ரவுடி பசங்களை கூட்டிட்டு வந்து, அதுவும் போலீஸ் பாதுகாப்புடன், எங்களையும் தாண்டி, அந்த அலுவலக கதவை எட்டி உடைத்து, ஆவணங்களை கொள்ளையடித்து கொண்டு போகிறார்.. திமுக ஆட்சிக்கு இதற்கு துணை போகிறது.. ஓபிஎஸ் மீது எங்களுக்கு வெறுப்பு வருவதற்கு என்ன காரணம் தெரியுமா? அவர் முதல்வராக இருந்தபோது, பொதுச்செயலாளர் சசிகலா என்று முடிவு செய்து, அந்த தீர்மானத்தை கொண்டுவந்து தரும்வரை, அவர் மீது பழியை ஏன் சுமத்தல?

பாலிட்டிக்ஸ்
தனக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டதுமே, கொலைப்பழியை சுமத்தி, அதர்மயுத்தம் நடத்தினார்.. அப்பவும் ஓபிஎஸ் திருந்தல.. இன்னைக்கு இவ்வளவு பேசுகிறாரே, அந்த வைத்திலிங்கம்தான் சசிகலாவை சேர்க்க மாட்டோம் என்கிறார்.. சசிகலாவை நீக்குவதாக தீர்மானம் கொண்டுவந்தவர்.. இவ்வளவும் பாலிட்டிக்ஸ் செய்தவர் ஓபிஎஸ்தானே.. 420 என்று டிடிவி தினகரனை சொன்னார்.. அப்பறம் ஏன் ரகசியமாக போய் அவரை சந்திக்கிறார்? கொலைப்பழியை சசிகலா மீது சுமத்திவிட்டு, மறுபடியும் அவரையே இங்கே கூப்பிடுகிறார்.. இதெல்லாம்தான் தொண்டர்களுக்கு சலிப்பு வந்துவிட்டது.

ஓபிஆர் + ஸ்டாலின்
இவர் பண்ணை வீட்டிலேயே, எந்தவித நிபந்தனையும் இன்றி சசிகலாவை சேர்த்து கொள்ள வேண்டும் என்று தீர்மானம் போடப்பட்டுள்ளது.. கேட்டால், அது தனக்கு தெரியாமலேயே நடந்துவிட்டது என்கிறார்.. இதெல்லாம்தான் அருவருக்கத்தக்க செயலாக இருக்கிறது.. இவர் மகன் ஸ்டாலினிடம் பாராட்டு பத்திரம் வாசிக்கிறார்.. இலங்கை நிவாரணத்துக்கு 50 லட்சம் நாங்கள் தருகிறோம் என்கிறார்.. ஒரு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்று சொல்பவர், யாரையும் கலந்தாலோசிக்காமல், நாங்கள் தருகிறோம் என்று திமுகவிடம் ஏன் மண்டியிட வேண்டும்? அதை கட்சி சார்பாக தந்துவிட்டு போகவேண்டியதுதானே..

குருமூர்த்தி
கட்சியில் வந்து இணைந்ததாலும், முன்னாள் முதல்வர் என்பதாலும், துணை முதல்வர் பதவி தரப்பட்டது.. ஆனால், அவரோ குருமூர்த்தி சொன்னாதால்தான் செய்தேன்.. பிரதமர் மோடி சொன்னதால்தான் செய்தேன் என்று ஓபிஎஸ்தான் சொல்லி கொண்டிருக்கிறார்.. உறுதியில்லாமலும், மாறி மாறி பேசுவதாலும்தான் இன்று அதிமுகவில் ஓபிஎஸ்ஸை தொண்டர்கள் வெறுத்துள்ளனர் " என்றார் ஆதிராஜாராம்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications