நீட் ஒரு "கொள்ளைக்காரன்".. பணம் இருந்தாதான் MBBS... இதைப் பாருங்க.. பதற வைக்கும் டேட்டா!
சென்னை: கடந்த ஆண்டு தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் பயில சேர்ந்தவர்களில் 99 சதவீதம் பேர் முன்னணி பயிற்சி மையங்களில் படித்தவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நீட் தேர்வு தமிழகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இது ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை நசுக்குவதால் இந்த தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
மேலும் நீட் தேர்வுக்கு கோச்சிங் கிளாஸ் என்ற பெயரில் நிறைய தனியார் பயிற்சி மையங்கள் மாணவர்களிடம் இருந்து பணத்தை கறக்கும் நிலை ஏற்படும் என அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

திமுக அரசு
இந்த நிலையில் தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்ற திமுக அரசு, நீட் தேர்வை ஆதரிக்க மாட்டோம் என கூறி வருகிறது. இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக நீட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது, பழைய படி 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடத்த கோரிக்கை எழுந்துள்ளது.

கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி
இந்த நிலையில் கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில் சில தனியார் நீட் தேர்வு மையங்களின் விளம்பரங்களை வைத்து கடந்த ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் எத்தனை பேருக்கு இடம் கிடைத்தது என்பது மதிப்பெண்களுடன் வெளியிட்டுள்ளார்.

கல்லூரி சேர்க்கை
அந்த பதிவில் அவர் கூறுகையில் முன்னணி நீட் கோச்சிங் மையங்களின் விளம்பரங்களில் இருந்து எடுக்கப்பட்ட டேட்டாக்களை ஆய்வு செய்தேன். அப்போது இந்த தேர்வு மையங்களில் பணத்தை கொட்டி படித்த மாணவர்களில் 99 சதவீதம் பேர் கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை பெற்றுள்ளனர்.

நிரூபணம்
இந்த பயிற்சி மையங்கள் மக்களிடம் இருந்து பணத்தை பிடுங்குகின்றன. இவற்றில் படித்த மாணவர்கள் 99 சதவீதம் பேருக்கு மருத்துவ சேர்க்கையில் இடம் கிடைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே பணம் இருந்தால் மட்டுமே எம்பிபிஎஸ் படிக்கலாம் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications