15 வயது சிறுமியை பலமுறை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய மளிகை கடை பணியாளர்.. சென்னையில் ஷாக்
சென்னையில் திருமண ஆசை காட்டி 15 வயது சிறுமியை பலமுறை பலாத்காரம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video

சென்னை: துரைப்பாக்கத்தில் திருமண ஆசை காட்டி 15 வயது சிறுமி இளைஞர் ஒருவரால் பலமுறை பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமடைந்ததை தொடர்ந்து அந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை திருவான்மியூரை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது 15 வயது மகள் 10ம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் உள்ளார்.
இவரது வீட்டின் அருகே உள்ள மளிகைக் கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சிறுமி அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது, மளிகைக்கடையில் வேலை செய்து வரும் 24 வயது இளைஞரான பெருங்குடியைச் சேர்ந்த தியாகராஜன் (எ) சீனுவுடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

காதல்
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனால் சிறுமியிடம் திருமணம் செய்துகொள்வதாக கூறியுள்ளார்.

பலமுறை பலாத்காரம்
இதனைக்கேட்ட சிறுமி சீனுவிடம் நெருங்கி பழகியுள்ளார். அப்போது சிறுமிக்கு திருமண ஆசை காட்டிய அவரை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மருத்துவ சோதனை
நேற்று முன்தினம் சிறுமிக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால் கவலையடைந்த பெற்றோர் சிறுமியை அதே பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

பெற்றோர் அதிர்ச்சி
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக கூறினர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தனர்.

போக்சோ சட்டத்தில் கைது
அதில் தனது கர்ப்பத்திற்கு காரணம் சீனுதான் என்றார் சிறுமி. இதையடுத்த பெற்றோர் அளித்த புகாரின்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சீனுவை கைது செய்தனர்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications