Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏலகிரி ரிசார்ட்டில் 3 நாள் கருத்தியல் பயிலரங்கம்! திமுக மாணவரணி நிர்வாகிகளுக்கு அழைப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக மாணவரணி நிர்வாகிகளுக்கு 3 நாள் கருத்தியல் பயிலரங்கம் ஏலகிரியில் உள்ள ஏ.ஜி.எஸ். ஹாலிடே ரிசார்ட்டில் வரும் 27,28,29 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

திமுக மாணவரணி நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்து அந்த அணியின் செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள பதிவு வருமாறு;

A 3-day ideological workshop for DMK student wing executive at AGS Resort, Yelagiri

முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலோடு, திராவிட இயக்க சிந்தனை, கொள்கை, லட்சியம், கோட்பாடுகள் ஆகிய கருத்தியலில் வலிமைமிக்கவர்களாகவும், இளைய தலைமுறையான மாணவ சமுதாயத்தினரிடம் திராவிட இயக்க சிந்தனை, கொள்கை ஆகியவற்றினை விதைக்கக் கூடியவர்களாக விளங்கிட வேண்டுமென்பதற்காகவும், அரசியலில் களமாடக்கூடிய முன்கள போர் வீரர்களாய் மாணவர் அணியினர் விளங்கிட வேண்டுமென்று, தி.மு.க. மாணவர் அணியின் மாவட்ட அமைப்பாளர் - துணை அமைப்பாளர்களுக்கு மூன்று நாள் கருத்தியல் பயிலரங்கம் நடத்தப்படவுள்ளது.

திராவிட இயக்க கொள்கைகள், லட்சியங்கள், கருத்துகள், இயக்கத்தின் வரலாறு, இயக்க தலைவர்களின் வரலாறு, கழக ஆட்சியில் இயற்றப்பட்ட சமூகநீதி, சமூக வளர்ச்சி, சமூக சீர்த்திருத்தங்கள், சமத்துவத்திற்கான சட்டங்கள், கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், தொழில் வளர்ச்சி ஆகியவற்றின் வளர்ச்சிக்கான சட்டங்கள், திட்டங்கள், அதனால் தமிழ் சமூகத்தில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள், அரசியல், பாலின சமத்துவம், எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சி முறையின் சாதனைகள் ஆகியவற்றினை குறித்து நன்கு தெரிந்து அரசியலில் களமாட, கருத்தியலில் வலிமைமிக்கவர்களாய் விளங்கிட மூன்று நாள் கருத்தியல் பயிலரங்கம் பயனளிக்கும் என்ற நோக்கத்தில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர் பேராசிரியர் சுப.வீ. அவர்களோடு இணைந்து பணியாற்றும் ஆசிரியர் குழுவினைக் கொண்டு இக்கருத்தியல் பயிலரங்கம் நடைபெற உள்ளது.

இப்பயிலரங்கத்தை தமிழ்நாட்டிலுள்ள கழக மாவட்டங்களின் அடிப்படையில், நான்கு இடங்களில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, முதல் பயிலரங்கம் சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு, சென்னை மேற்கு, சென்னை தென்மேற்கு, காஞ்சிபுரம் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மத்திய, திருவள்ளூர் மேற்கு, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு, தருமபுரி கிழக்கு, தருமபுரி மேற்கு ஆகிய 18 மாவட்டங்களின் அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கு வருகின்ற 27.10.2023 முதல் 29.10.2023 வரை மூன்று நாட்கள் திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலையிலுள்ள 'ஏ.ஜி.எஸ். ஹாலிடே ரெசார்ட்', பள்ளகனியூர் சாலை, அத்தனாவூரில், கருத்தியல் பயிலரங்கம் நடைபெற உள்ளது.

வருகிற 27.10.2023 அன்று காலை 10.00 மணிக்கு பயிலரங்க தொடக்க விழாவிற்கு, கழகப் பொதுச் செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் திரு. துரைமுருகன் அவர்கள் வருகைத் தந்து, பயிலரங்கத்தை தொடங்கி வைத்து, வாழ்த்துரை வழங்க உள்ளார். வருகிற 29.10.2023 அன்று பிற்பகல் 03.00 மணியளவில், பயிலரங்க நிறைவு விழாவில் பொதுப்பணி துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ. வேலு வருகைத் தந்து, பயிலரங்கத்தில் பயிற்சிப் பெற்ற மாவட்ட அமைப்பாளர் - துணை அமைப்பாளர்களுக்கு நிறைவுப்பரிசு வழங்கி வாழ்த்திட உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+