காமாட்சி பாட்டியின் கவுன்சிலர் கனவு! 94 வயதில் தேர்தலில் போட்டி! உள்ளாட்சித் தேர்தல் ருசிகரம்!
சென்னை: 94 வயது பாட்டி ஒருவர் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இது அரசியலுக்கு வர வேண்டும் என நினைப்பவர்களுக்கு ஒரு உந்துதலாக அமைந்துள்ளது என்று பலரும் பாராட்டியுள்ளனர்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வார்டு வரையறை செய்யப்பட்டபடி, ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. பொதுவாக நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலை விட ஒரு மாநிலத்தின் உள்ளாட்சி தேர்தல் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்.

இளைஞர்கள், இளம்பெண்கள் ஆர்வம்
நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் கட்சியில் செல்வாக்கு படைத்தவர்கள் மட்டுமே போட்டியிட முடியும். ஆனால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அந்தந்த பகுதியில் உள்ள தெரிந்த முகங்கள், இளைஞர்கள் என சாமானிய மக்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும். தமிழகத்தில் தற்போது ஏராளமான இளைஞர்கள், இளம்பெண்கள் மிகவும் ஆர்வத்துடன் உள்ளாட்சி தேர்தலுக்கு போட்டியிட வேட்புமனு செய்வதை பார்க்க முடிகிறது. இந்த செயல் மேலும் இளைஞர்கள் அரசியலுக்குள் வருவதற்கு தூண்டுதலாக இருக்கும்.

94 வயது பாட்டி வேட்புமனு தாக்கல்
இந்த நிலையில் 94 வயது பாட்டி ஒருவர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்து அனைவரையும் ஆச்ச்யரிய பட வைத்துள்ளார். பெசன்ட் நகர் மைக்கோ காலனி பகுதியை சேர்ந்த காமாட்சி என்னும் அந்த பாட்டி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 174-வது வார்டில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். தனக்கு ரூ.91 லட்சத்து 61 ஆயிரத்து 835 மதிப்பில் சொத்துகள் உள்ளதாக வேட்பு மனுவில் அவர் கூறியுள்ளார்.

மக்கள் பாராட்டு
தள்ளாடும் வயதிலும் தளராது தேர்தல் களத்தில் இறங்கியுள்ள பாட்டி அரசியலுக்கு வர வேண்டும் என நினைப்பவர்களுக்கு ஒரு உந்துதலாக அமைந்துள்ளார் என்றும் எந்த வயதிலும் மக்களுக்கு நல்லது செய்யலாம் என்று அவர் நிரூபித்துள்ளளதாகவும் அப்பகுதி மக்களும், நெட்டிசன்களும் காமாட்சி பாட்டியை பாராட்டி வருகின்றனர்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications