தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய நாளாக இருக்கும்.. வெதர்மேன் தந்த ஸ்பெஷல் அப்டேட்.. முழு விவரம்!
சென்னை: வானிலையை பொறுத்தவரை இன்று தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய நாளாக இருக்க போகிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக பெய்து வருகிறது. இதற்கு முந்தைய வடகிழக்கு பருவமழையை விட இந்த வருடம் மிக அதிக மழை பெய்து உள்ளது.
இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகளை தொடர்ந்து தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் மிக தீவிரமாக கனமழை பெய்து வருகிறது. இது தாழ்வு பகுதியாக உருவெடுக்கவில்லை என்றாலும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து உள்ளது.

அரபிக்கடல்
இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள கணிப்பில், அரபிக்கடலில் புதிய தாழ்வுப்பகுதி நாளை உருவாக உள்ளது. இதனால் இன்று தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய நாளாக இருக்க போகிறது. இதனால் உள் தமிழகம், மேற்கு தமிழகம், தென் தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யும். கடந்த 2 நாட்களை விட சென்னையில் மழை குறைய வாய்ப்புள்ளது மேலும் இன்று இரவு மேகங்கள் எப்படி உருவாகிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.

மன்னார் வளைகுடா
தற்போது மன்னார் வளைகுடாவில் சுழல் உருவாகும் வாய்ப்பு உள்ளது. இதனால் தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நேற்று இரவு பெய்த மழை என்பது எதிர்பார்த்த அளவிலேயே இருந்தது. பெரிய அளவில் இது பொதுமக்களின் துயரங்களை அதிகரிக்கவில்லை. நாம் பயந்து கொண்டிருந்த அந்த மிகப்பெரிய மழை மேகங்கள் இன்று சென்னையை நெருங்கி மேலே நகர உள்ளது, இதனால் சென்னையில் இன்றும் மழை பெய்யும். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக மழை குறையும்.

சென்னை
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று நல்ல மழை பெய்யலாம். ஆனால் மொத்தமாக மழை மேகங்கள் சென்னைக்கு மேல் தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளது. இதனால் ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களிலும் மழை பெய்யும். சென்னை மக்கள் அச்ச்சப்பட வேண்டாம்.

லேசான மழை
சென்னையில் தற்போது லேசான மழையே பெய்யும். பெரிய மழை பெய்தால் அப்டேட் கொடுக்கிறேன். டெல்டா முதல் கடலூர் வரையிலான பகுதிகளில் நல்ல மழை பெய்து உள்ளது. அதோடு இன்றும் கடலூர் மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. தற்காலிக சூழல் காரணமாக தென் மாவட்டங்களில் இன்று இரவும், நாளை காலையும் கனமழையை எதிர்பார்க்கலாம்.
Recommended Video

பாம்பன் மண்டபம்
பாம்பன் மண்டபம் பெல்ட்டில் உருவாகும் தற்காலிக சூழல் காரணமாக ராமநாதபுரத்தில் மிக கனமழை பெய்யும். தூத்துக்குடி - நெல்லை - தென்காசி மாவட்டங்களிலும், குமரியில் சில இடங்களிலும் கனமழை பெய்யும், என்று தமிழ்நாடு வெதர்மேன் தனது கணிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications