சென்னையில் இப்படி இருந்த கால்வாய்..இப்ப இப்படி ஆகிடுச்சு.. சென்னை மாநகராட்சி அசத்தல்
சென்னை: சென்னையில் இப்படி இருந்த கால்வாய்..இப்ப இப்படி ஆகிடுச்சு.. அசுத்தமாக பார்க்கவே மிக மோசமாக இருந்த திருவிக நகர் கால்வாய் இப்போது சுத்தம் செய்யப்பட்டு பளபளவென காட்சி அளிக்கிறது.
சென்னையில் வடகிழக்கு பருவ மழை தொடங்கிவிட்டது. சென்னையில் இன்று காலை முதலே கனமழை பல்வேறு இடங்களில் வெளுத்து வாங்கி வருகிறது.சென்னையில் பல்வேறு இடங்களில் மழை நீர் வெள்ளமாக பாய்ந்தோடுகிறது. தாழ்வான பகுதிகள், தண்ணீர் செல்ல வழியில்லாத பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.

இது ஒரு புறம் எனில், மழைநீர் எந்த சிக்கலும் இல்லாமல் கடலில் கலக்க வேண்டும் என்றால் அடையாறு, கொசஸ்தலை ஆறு, கூவம் ஆறு, பக்கிம்ஹாம் கால்வாய், பல்வேறு நீர் வழித்தட கால்வாய்களில் உள்ள அடைப்புகளை நீக்க வேண்டிய கட்டாயம்இருந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடையாறு, கொசஸ்தலை ஆறு, கூவம் ஆறு, தண்ணீரில் இருந்து ஆகாயத்தாமரை, பாட்டில்கள், குப்பைகள் போன்றவை அகற்றப்பட்டு சுத்தம் செய்யும் பணிகள் கடந்த சில மாதங்களாகவே நடந்து வந்தது.பல்வேறு கால்வாய்கள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன.
வடகிழக்கு பருவ மழை இந்த முறை மிக கனமழையாக பெய்யும் என்பதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-74, கொன்னூர் நெடுஞ்சாலை சந்திப்பில் உள்ள ஏகாங்கிபுரம் கால்வாய் குப்பைகளால் தண்ணீர் போக முடியாத நிலை இருந்தது.
மாண்புமிகு மேயர் திருமதி @PriyarajanDMK அவர்களின் அறிவுரையின்படி, வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-74, கொன்னூர் நெடுஞ்சாலை சந்திப்பில் உள்ள ஏகாங்கிபுரம் கால்வாயில் pic.twitter.com/YuDtfsdH7f
— Greater Chennai Corporation (@chennaicorp) November 1, 2023
வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, சென்னை மேயர் பிரியா அறிவுறுத்தலின் படி, சுத்தமான அந்த கால்வாய், யார் பார்த்தாலும் வாந்தி வரும் அளவிற்கு மோசமான நிலையில் இருந்த ஏகாங்கிபுரம் கால்வாய் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. குப்பைக் கழிவுகள் அகற்றப்பட்டு நீர் எளிதில் செல்லும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் செல்வதற்கு ஏற்ற வகையில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.இதனைமாநகராட்சி அதிகாரிகள் நேற்று நேரில் சென்று ஆய்வும் செய்தார்கள்.
இந்தசூழலில் இன்று கனமழை சென்னையில் வெளுத்து வாங்கி வருகிறது. சென்னையின் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள், சாலைகளில் இன்னும் பணிகள் முடிக்கப்படாத நிலைகள் இருந்தால் கவனமாக செல்ல வேண்டும். தண்ணீர் வெளியேற வழியில்லாத பகுதி மக்களும் கவனமாக செல்வது நல்லது. சென்னையில் இனி கனமழை இருக்கும் என்பதால் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.












Click it and Unblock the Notifications