குடிபோதையில் தகராறு செய்த தந்தை கொலை.. விபத்து என நாடகமாடியது அம்பலம்.. மனைவி, மகன் கைது

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    குடிபோதையில் தகராறு செய்த தந்தை கொலை.. மனைவி, மகன் கைது-வீடியோ

    சென்னை: பல்லாவரத்தில் குடிபோதையில் தகராறு செய்த தந்தையை தள்ளிவிட்டு கொலை செய்து விபத்து என நாடகமாடிய மகன் மற்றும் மனைவியை போலீசார் கைது செய்தனர்.

    சென்னையை அடுத்த பழைய பல்லாவரம் திருவள்ளுவர் நகர் அண்ணா தெருவைச் சேர்ந்தவர் ராஜன் (54). கார்பென்டராக வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    குடிப்பழக்கம் கொண்ட ராஜன் தினசரி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    தந்தையை தள்ளிவிட்ட மகன்

    தந்தையை தள்ளிவிட்ட மகன்

    கடந்த 31-ம் தேதி மதியம், வழக்கம் போல் குடித்துவிட்டு தகராறு செய்துள்ளார். அப்போது ராஜனின் மனைவி குளோரியா (52), மகன் அந்தோனி வின்சென்ட் ராஜ் (25) ஆகியோர் ஆத்திரமடைந்தனர். கோபமடைந்த அந்தோனி வின்சென்ட் ராஜ், தந்தை ராஜனை பிடித்து கீழே தள்ளி விட்டார்.

    குரோம்பேட்டை அரசு மருத்துவமனை

    குரோம்பேட்டை அரசு மருத்துவமனை

    இதில், படுாயமடைந்த ராஜனை, அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து, குரோம்பேட்டை அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றனர்.

    முதலுதவி

    முதலுதவி

    அப்போது பாரதி நகர், இரண்டாவது தெருவில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியாக புகார் கொடுக்கப்பட்டது. இதற்கிடையில், படுகாயமடைந்த ராஜனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    சிசிடிவி

    சிசிடிவி

    அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 3-ஆம் தேதி காலை ராஜன் இறந்தார். இவ்வழக்கு குறித்து விசாரித்த, குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு
    பிரிவு போலீசார், ‘சிசிடிவி' கேமரா பதிவு உள்ளிட்ட ஆதாரங்களை கொண்டு விசாரணை நடத்தினர்.

    போலீஸ் விசாரணை

    போலீஸ் விசாரணை

    அவர்கள் கூறிய இடத்தில் விபத்து ஏதும் நடக்கவில்லை என தெரியவந்தது. ராஜன் வாகனம் மோதி இறக்கவில்லை என்பதும், கீழே
    தள்ளிவிட்டதில் படுகாயமடைந்து இறந்ததும் தெரியவந்தது.

    இருவர் கைது

    இருவர் கைது

    இதையடுத்து, இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார், ராஜனின் மனைவி குளோரியா மகன் அந்தோனி வின்சென்ட் ராஜ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+