சென்னையில் நடந்த ‘ஜெய்பீம்’! கைவிலங்கோடு பூட்ஸ் காலால் உதைத்த போலீஸ்! சாட்டையை எடுத்த நீதிமன்றம்..!
சென்னை : சென்னை அருகே குற்ற வழக்கிற்கு தொடர்பில்லாதவரை 5 மணி நேரம் கைவிலங்கு போட்டு, ,பூட்ஸ்காலால் உதைத்து லத்தியால் அடித்ததாக பட்டாபிராம் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் ஜார்ஜ் லாரன்ஸ் மீது திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதியப்பட்டு விசாரணை துவக்கப்பட்டுள்ள சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம் தண்டுரை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் அப்பகுதியில்
கார்பெண்டராக வேலை செய்து வருகிறார்.
இவர் தான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பட்டாபிராம் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் ஜார்ஜ் லாரன்ஸ் மீது திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தாக்குதல்
அதில் பட்டாபிராம் ஆய்வாளர் ஜார்ஜ் லாரன்ஸ் கடந்த 5ஆம் மாதம் இறந்து போன வெங்கடேசனின் உறவினர் உடலுக்கு மாலை அணிவிக்க சென்ற போது, அவருக்கு தொடர்பு இல்லாத, அங்கு நடைபெற்ற சண்டையை காரணம் காட்டி காவலர்கள் மூலம் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளார். மேலும் காவல் நிலையத்தில் சட்டத்துக்கு புறம்பாக ஒரு கொலை குற்றவாளியை போல் கையிைல் விலங்கு போட்டு சுமார் 5 மணி நேரம் பூட்ஸ் காலால் எட்டி உதைத்து, லத்தியால் அடித்தும் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாகக கூறியுள்ளார்.

வழக்கு
இதனால் மிகுந்த உடல் வேதனையோடு மன வேதனையும் ஏற்பட்டுள்ளது என திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இதனை விசாரித்த திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் ஆய்வாளர் ஜார்ஜ் லாரன்ஸ் மீது குற்றச்சாட்டு வரையப்பட்டு இரண்டு பிரிவுகளின் கீழ் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. அதன்படி விசாரணைக்கு அடுத்த மாதம் 9 ஆம் தேதி நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளது.

புகார்
அதேபோல் பாதிக்கப்பட்ட வெங்கடேசன் பட்டாபிராம் ஆய்வாளர் ஜார்ஜ் லாரன்ஸ் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை இயக்குனர்,ஆவடி காவல் ஆணையரகம்,துணை ஆணையர் என சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் புகார் அளித்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட வெங்கடேஷின் வழக்கறிஞர் ஸ்ரீதரன் பாபு கூறுகையில் பட்டாபிராம் காவல் ஆய்வாளர் ஜார்ஜ் லாரன்ஸ் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்துகிறார். எந்தவொரு தவரும் செய்யாத வெங்கடேசனிடம் மனித உரிமை மீறல் செய்துள்ளார்." என கூறியுள்ளார்.

கோரிக்கை
அதேபோல் மேலும் புகார் கொடுக்க வரும் பொதுமக்கள் வழக்கறிஞர்களை தரக்குறைவாக நடத்தி ஒருமையில் பேசி வருகிறார்.இதேபோல் ஜார்ஜ் லாரன்ஸ் மீது 5 க்கும் மேற்பட்ட வழக்குகள் திருவள்ளூர் நீதிமன்றத்தில் உள்ளது எனவும், எனவே பட்டாபிராம் ஆய்வாளர் ஜார்ஜ் லாரன்ஸ் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. முதல்வரும் இந்த விஷயத்தில் தலையிட கோரிக்கை விடுத்துள்ளார் பாதிக்கப்பட்ட வெங்கடேசன்.
-
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்!












Click it and Unblock the Notifications