பெண் மீது தாக்குதல்.. அமர்பிரசாத் ரெட்டி தலைமறைவு.. தேடும் தனிப்படை போலீஸ்.. முன்ஜாமின் கிடைக்குமா
சென்னை: பாஜக பெண் நிர்வாகியை தாக்கிய வழக்கில் அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ள நிலையில் முன் ஜாமின் கோரி சென்னை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமர்பிரசாத் ரெட்டி தாக்கல் செய்துள்ள முன் ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது.
சென்னை கோட்டூர்புரம் பாரதி அவன்யூ பகுதியை சேர்ந்தவர் தேவி. தேவியின் தங்கை ஆண்டாள் பாஜக மாவட்ட துணை தலைவியாக பதவி வகித்து வருகின்றார். கடந்த 19ஆம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருவதை ஒட்டி சித்ரா நகர் பகுதியில் இருந்து ஆட்களை அழைத்து வருவது தொடர்பாக ஆண்டாளுக்கும், அதே கட்சியை சேர்ந்த நிவேதா என்பவருக்கும் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து கடந்த 21ஆம் தேதி இரவு 8 மணிக்கு மேல் அமர் பிரசாத் ரெட்டியின் கார் ஓட்டுநர் ஸ்ரீதர், மகளிர் அணியை சேர்ந்த நிவேதா, கஸ்தூரி மற்றும் அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் ஆண்டாள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தேவியையும், தங்கை ஆண்டாளையும் தாக்க தொடங்கியுள்ளனர்.
அப்போது அமர் பிரசாத் ரெட்டியிடம் பிரதமர் வருகையின்போது ஆட்களை அழைத்து வருவதற்காக நீங்கள் பணம் வாங்கி வந்து விட்டதாகவும், அதில் எங்களுக்கு பங்கு வேண்டும் எனவும் கேட்டு மிரட்டி தொந்தரவு செய்தனர். தொடர்ச்சியாக தாக்கிய போது தேவியின் மண்டை உடைந்து உடனடியாக பாரதிராஜா மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாகவும், 2 நாட்கள் வெளியே வருவதற்கு பயமாக இருந்ததாகவும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக வெளியே கூறினால் உங்கள் குடும்பத்துடன் கொலை செய்துவிடுவோம் என ஸ்ரீதர் மிரட்டி உள்ளதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமர் பிரசாத் ரெட்டி கூறியதாக அவரது ஓட்டுநர் மற்றும் பாஜக நிர்வாகிகள் பெண் பாஜக நிர்வாகி மற்றும் சகோதரியை தாக்கிய விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த புகாரின் பேரில், அமர் பிரசாத் ரெட்டி, அவரது ஓட்டுநர் ஸ்ரீதர், பா.ஜ.க நிர்வாகிகள் நிவேதா மற்றும் கஸ்தூரி ஆகியோர் மீது கோட்டூர்புரம் போலீசார், வன்கொடுமை தடுப்புச் சட்டம், அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தி காயப்படுத்துதல் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இந்த வழக்கில் அமர் பிரசாத் ரெட்டியின் ஓட்டுநர் ஸ்ரீதரை கைது செய்தனர்.
இந்த நிலையில், பா.ஜ.க பெண் நிர்வாகியைத் தாக்குதல் நடத்திய வழக்கில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அமர்பிரசாத் ரெட்டி தலைமறைவாகி இருக்கிறார் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து, 2 தனிப்படைகள் அமைத்து தலைமறைவாகியுள்ள அமர் பிரசாத் ரெட்டியை தேடி வருகின்றனர்.
இதனிடையே பெண் நிர்வாகியை தாக்கிய வழக்கில் முன் ஜாமின் கோரி அமர் பிரசாத் ரெட்டி சென்னை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு இன்று ஹைகோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது. தனிப்படை போலீசார் தேடி வரும் நிலையில் அமர்பிரசாத் ரெட்டி கைது நடவடிக்கையில் இருந்து தப்புவாரா அவருக்கு முன் ஜாமின் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications