வளைந்து நெளிந்து புகுந்த வேட்டையன்! தண்ணி காட்டிய 'லியோ'! நெடுங்குன்றத்தில் சம்பவம்
சென்னை: நெடுங்குன்றத்தில் காம்பவுண்டுக்குள் புகுந்த 5 அடி நீள நல்ல பாம்பை, வீட்டிற்குள் வரவிடாமல் தடுத்து நிறுத்தி உள்ளது 'லியோ' என பெயரிடப்பட்ட பூனை. இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.
மழைக்காலம் வந்துவிட்டாலே ஆங்காங்கே வெள்ளம் தேங்கிவிடும். இதனால், புதரில் இருக்கும் பூச்சி, வண்டுகள் எல்லாம் வீட்டை நோக்கி படையெடுக்க தொடங்கிவிடும். ஒவ்வொரு மழை காலத்திலும் இந்த பிரச்னை இருக்கத்தான் செய்கிறது. இதில் சில நேரம் பாம்புகள் கூட வீட்டிற்குள் வந்துவிடுகிறது. சென்னையை அடுத்த நெடுங்குன்றம் பகுதியிலும் இதேபோன்ற சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது.

அதாவது, சம்பவம் நடந்த வீட்டில் பூனை ஒன்று வளர்ந்து வந்திருக்கிறது. இன்று காலை, வீட்டு காம்பவுண்ட் பகுதியில் உள்ள செடிகளின் மறைப்பில் இந்த பூனை எதையோ பார்த்தவாறு அமர்ந்திருக்கிறது. தொடக்கத்தில் யாரும் இதை பெரியதாக கண்டுக்கொள்ளவில்லை. ஆனால், ரொம்ப நேரமாக பூனை அதே இடத்தில் இருக்கவே வீட்டு உரிமையாளருக்கு சந்தேகம் வந்திருக்கிறது. நெருங்கி சென்று பார்த்தபோதுதான், பாம்பு ஒன்றை பூனை மடக்கி பிடித்து வைத்திருப்பது தெரிய வந்திருக்கிறது.
இதனையடுத்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். பின்னர் அவர்கள் வந்து பாம்பை லாவகமாக பிடித்து கொண்டு சென்றிருக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது. இது தொடர்பான வீடியோவும் சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவி வருகிறது.
பாம்புகள்: பாம்புகளில் எல்லா வகைளும் விஷம் கிடையாது. நம்மில் பலர், பாம்புகளை பார்த்த மாத்திரத்தில் அந்த இடத்திலே அடித்து கொன்று விடுகிறார்கள். இதுகுறித்து வனத்துறையினர் மிகுந்த கவலை தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டை பொறுத்த வரை ஏராளமான பாம்பு வகைகள் இருக்கின்றன. ஆனால், வெறும் 4 வகை மட்டுமே இதில் விஷம் உடையவை. மற்ற பாம்புகள் அனைத்தும் விவசாயத்திற்கு உதவும் வகையில் எலிகளையும், சிறிய பூச்சிகளையும் வேட்டையாடி சாப்பிட்டு உயிர் வாழ்கின்றன. எனவே இதை கொல்ல வேண்டியதில்லை என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.
பாம்பு vs பூனை: பாம்புகளும், பூனைகளும் இயற்கையிலேயே வேகமான உயிரினங்கள்தான். ஆனால், இரண்டுக்கும் போட்டி என்று வந்துவிட்டால் அதில் நிச்சயம் பூனைதான் ஜெயிக்கும். பாம்பு நேர்க்கோட்டில் வேகமாக இயங்கும். ஆனால் பூனைகளால் எந்த கோணத்திலும் வேகமாக இயங்க முடியும். எனவே, பாம்பின் தாக்குதலிலிருந்து பூனை தப்பிவிடும். ஆனால், பதிலுக்கு பாம்பை தாக்குவது என்பது கொஞ்சம் கஷ்டமான காரியம். எனவேதான் நெடுங்குன்றம் வீட்டிலும் பூனை நீண்ட நேரமாக அசையாமல் பாம்பை மடக்கி பிடித்து வைத்திருந்திருக்கிறது.
அடுத்த முறை நீங்களும் பாம்பை பார்த்தால் உடனே கொல்லாமல், வனத்துறையினருக்கு தகவல் தெரிவியுங்கள். வீட்டில் செல்ல பிரானிகளை வளர்ப்பதன் மூலம் இதுபோன்ற ஆபத்திலிருந்து நம்மையும் பாதுகாத்துக்கொள்ளலாம். என்ன இருந்தாலும் வேட்டையன், வேட்டையன்தான்! லியோ, லியோதான்!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications