"கொங்கு".. அப்படின்னா உண்மையான அர்த்தம் இதுதான்.. வானதி டிவீட்டுக்கு வன்னியரசு பதில் விளக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 'கொங்கு நாடு' தனி மாநிலம் உருவாக்கப்படும் என்கிற செய்திக்கு ஆதரவாக பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் ஃபேஸ்புக்கில் போட்ட பதிவு இப்போது பெரும் சர்ச்சையாகி உள்ளது.

மத்திய இணை அமைச்சராக எல். முருகன் நியமிக்கப்பட்டது தொடர்பான மத்திய அரசின் செய்திக் குறிப்பில் கொங்கு நாடு என குறிப்பிடப்பட்டிருந்தது. இது தமிழகத்தில் மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

மாநில உரிமைகளை வலியுறுத்தி பேசும் திமுக, அரசியல் சாசனத்தின் இடம்பெற்றுள்ள ஒன்றியம் என்ற சொல்லை மத்திய அரசு என்பதற்கு பதிலாக பயன்படுத்தி வருகிறது. சட்டசபையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ஒன்றியம் சொல்லையே பயன்படுத்துவோம் எனவும் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

கொங்கு நாடு - வானதி ஆதரவு

கொங்கு நாடு - வானதி ஆதரவு

இதற்கு பதிலடி தருவதற்காக கொங்கு நாடு என தமிழகத்தை பிரிக்கும் திட்டத்தை கோடிட்டு காட்டும் வகையில்தான் மத்திய அரசின் செய்திக் குறிப்பை அரசியல் பார்வையாளர்கள் பார்க்கின்றனர். தமிழக பாஜக தலைவர்களும் இதனை நியாயப்படுத்தி வருகின்றனர். பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், கொங்குநாடு குறித்து இலக்கிய ஆதாரங்களைப் பட்டியலிட்டிருந்தார்.

கொங்கு தேர் பாடலால் சர்ச்சை

கொங்கு தேர் பாடலால் சர்ச்சை

வானதி சீனிவாசன் அப்படிப் போட்ட பதிவு ஒன்று இப்போது சர்ச்சையாகி உள்ளது. அப்பதிவின் தொடக்கத்திலேயே, கொங்கு தேர் வாழ்க்கை என்று இறையனாரின் சங்கப் பாடல் காலம் முதல் கொங்கு நாடு என்ற வரையறை உண்டு என வானதி சீனிவாசன் எழுதியிருந்தார். திருவிளையாடல் திரைப்படத்தில் பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா? இல்லையா? என்கிற விவாத காட்சியிலும் இந்த சங்கப் பாடல் வரும்.

கொங்கு-தேன்

கொங்கு-தேன்

இந்த பாடலில் குறிப்பிட்டிருக்கும் கொங்கு தேர் வாழ்க்கை என்பது கொங்கு நாடு என குறிப்பதாக வானதி சீனிவாசன் பதிவிட்டுள்ளார். இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னி அரசு பதில் அளித்துள்ளார். கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி காமம் செப்பாது கண்டதுமொழிமோ என இறையனார் குறுந்தொகையில் சொல்வது, #கொங்கு என்றால் தேன். தன்னுடைய காதலியின் கூந்தல் மணத்தை விட வேறு ஏதாவது மலர் மணக்குதா? ஏனென்றால் பூ பூவாய் தேனெடுக்க அலைவது நீதானே தும்பியே என கேட்கிறார் @VanathiBJP என பதிவிட்டிருக்கிறார்.

கொங்குதேர் பாடல் விளக்கம்

கொங்குதேர் பாடல் விளக்கம்

அதேபோல் வானதி சீனிவாசனின் ஃபேஸ்புக் பக்கத்தில் Selva Kp என்ற நெட்டிசன், இறையனார் எழுதிய இந்த பாடலில் உள்ள கொங்கு என்பதன் பொருள் வேறு என்பதனை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். விளக்கம்:- கொங்கு- பூவின் மகரந்தம் தேர்- தேர்நெடுக்கும் வாழ்க்கை-வாழும் அஞ்சிறைத்தும்பி-உள்ளே சிறகுகளை உடைய தும்பி(வண்டு)-(அம் சிறை -அழகிய சிறகுகள்) என குறிப்பிட்டுள்ளார்.

புதிய விளக்கம்

புதிய விளக்கம்

இப்படி சர்ச்சை வெளியான நிலையில் வானதி சீனிவாசன் இன்னொரு பதிவையும் போட்டிருக்கிறார். அதிலும் கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சறை தும்பி பாடலில் ஈசன் குறிப்பிட்டது தேனுக்கு நிகராக கொங்கு என்ற பதத்தை உபயோகித்து இருப்பார். குறிஞ்சி , முல்லை, மருத நிலங்களில் எல்லாமே தேனிக்களும் தேன் கூடும் நிறைந்த சமூக வாழ்வியலை சொல்லும் பல்வேறு சங்க சித்திரங்கள் இருக்கிறது. தேன் நிறைந்த குறிஞ்சி நிலங்கள் நிறைந்த பகுதி என்பதாலேயே கொங்கு நாடு என்று சங்கப்புலவர்கள் சொல்லி இருக்கிறார்கள். கொங்கு ஏழு சிவத்தலங்கள் , கொங்கு மண்டல சதகங்கள், கொங்கு எல்லைகள் பற்றிய தனிப்பாடல்கள், சிலப்பதிகாரம் , தண்டியலங்காரம் என்று பல்வேறு சான்றுகளை சொல்லலாம். சேர , சோழ, பாண்டிய, கொங்கு , தொண்டை நாடு உள்ளிட்டவைகளையே 5 பகுதிகளாக சங்கப்புலவர்கள் பாடி இருக்கிறார்கள் என ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+