பிக்பாஸ் வீடியோவில் கண்ட காட்சி! உற்று பார்த்து கண்டுபிடித்த போலீஸ்! முக்கிய போட்டியாளர் அதிரடி கைது
சென்னை: பிரபல பிக்பாஸ் போட்டியாளர் ஒருவர் போலீசார் மூலம் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் பிக்பாஸ் சீசன் 5 பிரபலம் அடைந்து வருகிறது. புதிதாக வரும் நாட்களில் 5 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உள்ளே வர உள்ளனர். இதனால் போட்டி மேலும் பிரபலம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் பிக்பாஸ் சீசன் டிரெண்டாகிக்கொண்டு இருக்கும் போது கர்நாடகாவிலும் பிக்பாஸ் சீசன் பிரபலமாக சென்று கொண்டு இருக்கிறது. அங்கே 10வது சீசன் நடந்துள்ளது. இந்த நிலையில்தான் கர்நாடகாவை சேர்ந்த பிரபல பிக்பாஸ் போட்டியாளர் ஒருவர் போலீசார் மூலம் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கைது: பிக்பாஸ் கன்னட சீசன் 10 போட்டியாளர் வர்தூர் சந்தோஷ், பிக்பாஸ் வீட்டில் புலி நகம் கொண்ட செயின் அணிந்து விளையாடியதற்காக நேற்று இரவோடு இரவாக கைது செய்யப்பட்டார். பெங்களூரு நகர்ப்புற வனத்துறை துணைப் பாதுகாவலர் என்.ரவீந்திரகுமார் கைது செய்யப்பட்டதை உறுதி செய்து, அக்டோபர் 23-ம் தேதி மாஜிஸ்திரேட் முன்பு சந்தோஷ் ஆஜராக உள்ளதாக தெரிவித்தார்.
மக்கள் இதை கவனித்து இணையத்தில் தொடர் புகார் அளித்து வந்தனர். அவர் வீடியோவில் வந்ததை பார்த்து புகார் அளித்தனர். இதையடுத்து வீடியோக்களை பார்த்து உறுதி செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.
வர்தூர் சந்தோஷ் கழுத்தில் அணிந்து இருந்த செயின் பல தலைமுறைகளாக அவர் அணிந்திருக்கும் செயின் என்று போலீசாரிடம் கூறியுள்ளார்.

என்ன நடந்தது?: பல தலைமுறைகளாக கடந்து வந்த குடும்ப குலதெய்வ சொத்து இது என்று வர்தூர் சந்தோஷ் கூறியுள்ளார். இருப்பினும், அவர் புலி நகத்தை அணிவது வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972 ஐ மீறுவதாகும், இந்த சட்டப்படி விலங்குகளின் உறுப்புகள் அல்லது பாகங்களை அணிவது அல்லது காட்சிப்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாக கருதுகிறது. இந்த சட்டத்தை மீறியதால் தற்போது அவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
பெங்களூரின் வர்தூர் பகுதியில் கால்நடை வியாபாரத்தில் ஈடுபட்டு இவர் பிரபலம் அடைந்தார். அதேபோல் ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டதற்காக அறியப்பட்ட சந்தோஷ் அதன் மூலம் பல கோடிகளை சம்பாதித்து உள்ளது. அவரது தொடர்ந்து போட்டு வந்த சில ஷார்ட் வீடியோக்கள் வைரலான காரணத்தால் சமூக ஊடகங்களில் பிரபலமடைந்தார்.
புகார்: அவரின் செயினை பார்த்து பலர் தொடர்ந்து புகார் அளித்து வந்துள்ளனர். இவர் எப்படி செயின் அணியலாம். இது சட்டப்படி தவறு. விலங்குகள் நலத்திற்கு எதிரானது. அதை தைரியமாக அவர் சேனலில் வேறு அணிந்து வந்துள்ளார். இதை வீடியோவில் வெளிப்படையாக காட்டிக் கொண்டு வந்துள்ளார். இதை பெருமையாக வேறு அவர் அணிந்து கொண்டு இருக்கிறார்.
அதனால் அவர் மீது ஆக்சன் எடுக்க வேண்டும். அவரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மக்கள் இதை கவனித்து இணையத்தில் தொடர் புகார் அளித்து வந்தனர். அவர் வீடியோவில் வந்ததை பார்த்து புகார் அளித்தனர். இதையடுத்து வீடியோக்களை பார்த்து உறுதி செய்து அவரை போலீசார் கைது செய்தனர். அவருக்கு இந்த வழக்கில் பெயில் கிடைப்பது சிரமம் என்று கூறப்படுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications