ஹிர்திக்தான் அழகு! விஜய் சேதுபதியை சீண்டிய நபர்! குதித்து வந்து சப்போர்ட் செய்த வடஇந்தியர்கள்! பரபர
சென்னை: தமிழ் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஆதரவாக இணையத்தில் வடஇந்திய நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவருக்கு கிடைக்கும் இந்த பாராட்டுக்கள் இணையம் முழுக்க கவனம் ஈர்த்துள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி,மாதவன் நடிப்பில் இயக்குனர் புஷ்கர் காயத்திரி இயக்கத்தில் வெளியான படம் விக்ரம் வேதா. இந்த படம் கோலிவுட்டில் மிகப்பெரிய ஹிட் அடித்தது.
படத்தின் வெற்றியை தொடர்ந்து கோலிவுட்டில் இருந்து இதே படம் தற்போது பாலிவுட் சென்றுள்ளது. பாலிவுட்டிலும் புஷ்கர் காயத்திரியே படத்தை இயக்குகின்றனர்.
இந்த படத்தில் ஹிந்தியில் ஹர்திக் ரோஷன் வேதா கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். அதேபோல் சயீப் அலி கான் விக்ரம் பாத்திரத்தில் நடித்துள்ளார்.

டிரெய்லர் ஹிட்
இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. சாம் சிஎஸ் பின்னணி இசையில் மிரட்டலாக டிரெய்லர் வெளியாகி இருந்தது. விஜய் சேதுபதி போலவே முரட்டு ரவுடியாக இதில் ஹர்திக் ரோஷன் நடித்து இருந்தார். அதே சமயம் வடஇந்தியாவிற்காக படத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஏகே 47 வைத்து ஹிர்திக் ரோஷன் சுடுவது போல எல்லாம் காட்சிகள் படத்தில் வைக்கப்பட்டு இருக்கின்றன. படத்தின் டிரெய்லர் வைரலாகி உள்ளது.

கிண்டல்
இந்த நிலையில் வடஇந்தியர் ஒருவர் விஜய் சேதுபதியை கிண்டல் செய்து பேஸ்புக்கில் பதிவிட்டு இருந்தார். அதில், பலரும் ஹிர்திக் ரோஷனை விஜய் சேதுபதியோடு ஒப்பிட்டு பேசுகிறார்கள். விக்ரம் வேதா டிரெய்லர் வந்ததில் இருந்தே இப்படி ஒப்பிட்டு பேசி வருகிறார். இதை நான் ஏற்க மாட்டேன். பாலிவுட்டின் கடவுள் ஹிர்திக் ரோஷன். ஆனால் விஜய் சேதுபதி அப்படி அல்ல. விஜய் சேதுபதிக்கு அழகு இல்லை. அவர் கலராக இல்லை. அவர் ஹிர்திக் அளவிற்கு சிறந்த நடிகரும் இல்லை.

விமர்சனம்
ஹிர்திக் ரோஷனிடம் இருக்கும் அளவிற்கு சொத்துக்களும் கூட விஜய் சேதுபதியிடம் இல்லை என்று விமர்சனம் வைத்து இருந்தார். இந்த வடஇந்தியரின் கமெண்ட் தமிழர்கள் இடையே கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. இன்னமும் கலர் எல்லாம் பார்த்து படம் பார்க்கிறீர்கள்? என்று பலர் கேள்வி எழுப்பி இருந்தனர். அதோடு விஜய் சேதுபதி எவ்வளவு சிறந்த நடிகர் என்றும் கமெண்ட் செக்சனில் பதில் அளித்தனர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் விஜய் சேதுபதிக்கு ஆதரவாக வடஇந்தியர்கள் பலரும் பேசினார்கள்.

என்ன சொன்னார்கள்
ஹிர்திக் ரோஷன் பெரிய நடிகராக இருக்கலாம். ஆனால் அவரை விட விஜய் சேதுபதி சிறப்பாக நடிக்க கூடியவர். தேவையின்றி இந்த ஒப்பீடு தேவையில்லை. ஒரே வருடத்தில் ஹீரோ, வில்லன், குணசித்திர கதாபாத்திரங்களில் நடிக்கும் திறமை கொண்டவர் விஜய் சேதுபதி. நான் வடஇந்தியர், ஆனால் எனக்கே நீங்கள் செய்யும் ஒப்பீடு மோசமாக தெரிகிறது என்று வடஇந்தியர்கள் பலரும் இந்த போஸ்டுக்கு பதில் அளித்துள்ளனர். இரண்டு பேருமே நல்ல நடிகர்கள்தான் என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

பதிலடி
உண்மையான விக்ரம் வேதா படம் பார்த்தவர்களுக்கு தெரியும் . அதில் இப்போது இருக்கும் ஹிர்திக் லுக்கை விட சிறப்பான லுக்கில் விஜய் சேதுபதி இருந்தார் என்று. தேவையின்றி ஒப்பீடு செய்ய வேண்டாம். இந்த போஸ்ட் நிறவெறியை பரப்புவது போல இருக்கிறது. நடிகர்கள் எல்லாம் ஒற்றுமையாக இருக்கிறார்கள். ரசிகர்கள்தான் இப்படி மோதிக்கொள்கிறார்கள் என்று வடஇந்திய நெட்டிசன்கள் விஜய் சேதுபதியை ஆதரித்து போஸ்ட் செய்துள்ளனர். வடஇந்தியர்கள் பலர் விஜய்க்கு சேதுபதிக்கு ஆதரவாக பேசுவது இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications