வாழ்த்துகள்.. நலம் பெற வாழ்த்துகள்... (மிஸ்டர்) ரஜினி.. ஒரு ரசிகனின் மனம் திறந்த மடல்
அன்புள்ள ரஜினி,
நினைவு தெரிந்த நாளில் முரட்டுக்காளைதான் நான் பார்த்த உங்களது முதல் படம்
நகரத்தில் போய் நான் பார்த்த முதல் படம் கூட உங்களது வேலைக்காரன்..
தளபதி படத்தைப் பார்த்துவிட்டு நானும் என் நண்பன் செல்வனும் எங்கள் எ. பண்ணைப்பட்டியில் சூர்யா- தேவா என்றே வலம் வந்தோம்.
பாட்ஷா படத்தை பல முறை பார்த்துவிட்டேன்.. அப்பப்பா நடிப்புப் பேராற்றலை கொட்டித் தீர்த்திருப்பீர்கள்.

நண்டூறுது.. நரியூறுது.. ராஜா என்பார் மந்திரி என்பார் பாடல்கள் எல்லாம் எனக்கு ஒருகாலத்தில் என் சகாக்கள்..
இப்படித்தான் என் மனதில் ஓரத்தில் உங்கள் ரசிகனாகவும் இருந்த காரணத்தால்
உங்களுக்கு மிஸ்டர் ரஜினி அல்லது ரஜினிகாந்த் அல்லது ரஜினிசார் எதுவும் போட தோன்றவில்லை.
என்னைப் பொறுத்தவரையில் நீங்கள் ரஜினி..
ஒவ்வொரு திரைப்படத்திலும் தமிழ் மக்களிடம் வசூலை வாரி குவிக்க திட்டமிட்டு காட்சி அமைப்புகளை இடம்பெறச் செய்வதை எல்லாம் ரசிக்கத்தான் செய்தோம்..
ஆனால் அரசியல் எனும் இந்த மக்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்ற எங்களது தலைவிதியை தீர்மானிக்கிற தானைத் தலைவனாக உங்களை எப்போதும் பார்த்தது இல்லை.. நினைத்ததும் இல்லை.
நீங்கள் மக்களை மகிழ்விக்க சொந்த மண்ணைவிட்டு இந்த மண்ணுக்கு வந்த ஒரு கலைஞன்.. உங்களை நீங்களே நினைக்காத அளவுக்கு இந்த மண்ணும் மக்களும் கொண்டாடிக் கொண்டே இருக்கின்றனர். உங்களுக்கு இதுவே அதிகமானதும்கூடத்தான்.
ஆனால் உச்சநட்சத்திரமாக, சூப்பர் ஸ்டராக ஜொலித்துக் கொண்டிருந்த நீங்கள் ஏதோ ஒரு காரணத்தாலோ நெருக்கடியாலோ தேவையே இல்லாமல் அரசியல் எனும் அகழிக்குள் கால் நூற்றாண்டுக்கும் மேலாக காலை வைப்பதும் இழுப்பதுமாகவே இருந்து வந்தீர்கள்.
இந்த தமிழ் மக்களுக்கு நல்லது செய்யத்தான் நான் நினைத்தேன் என்றெல்லாம் நீங்கள் பேசினீர்கள்.. இப்போதும் பேசுகிறீர்கள்.. இந்த மக்களுக்கு நல்லது செய்ய இந்த மக்களின் மத்தியில் பிறந்த மகத்தான தலைவர்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. பெருந்தலைவர்களான கருணாநிதியும் ஜெயலலிதாவும் மறைந்த போது எங்களை கொச்சைப்படுத்தும் வகையில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது என விமர்சித்தது கொந்தளிக்க வைத்தது.
எங்கள் மண்ணுக்கு அன்னியமான ஆன்மீக அரசியலை திணிக்க திணவோடு துணிந்த போது எதிர்க்கத்தான் துணிந்தோம்.
உங்களை கொண்டாடிய தமிழர் நிலம் உங்களை பந்தாடவும் தயாராகவும்தான் இருந்தது. காலம் தந்த தொற்று கொரோனாவின் புண்ணியத்தால் நீங்கள் இப்போது ஒதுங்கிவிட்டீர்கள்.. அரசியலுக்குள் வராமலேயே உங்கள் திரைப்பயணத்தை தொடரப் போகிறீர்கள்.
இந்த 3 ஆண்டுகாலம் எங்கள் மக்களிடத்தில் நீங்கள் தந்த வலிகள் அத்தனை மோசமானது. ஒட்டுமொத்த வலியையும் தேர்தல் வாக்குப் பதிவு இயந்திரத்தில் இறக்கி வைக்கத்தான் காத்திருந்தோம்..நல்லவேளை அரசியலுக்கு வரலாமலேயே ஒதுங்கிவிட்டீர்கள்.
இதுதான் உங்களுக்கு நல்லது ரஜினி.. நாங்கள் உங்கள் நடிப்பை ரசிக்கிறோம்.. எங்களை மகிழ்விக்கும் உங்களுக்கான கூலி வந்து சேர்ந்துவிடும்.. அதற்கு அப்பால் நீங்கள் எதுவுமே எதிர்பார்க்காமல் ஒதுங்கி நில்லுங்கள்.. உங்களுக்கும் எங்களுக்கும் நல்லது.
கொரோனா பெருந்தொற்று உங்களை அண்டாமல் உங்களது உடல்நிலைக்கு பாதிப்பு வராமல் இருக்க எங்களது வாழ்த்துகள் எப்போதும் இருக்கும்..
அன்புடன்
ரஜினி ரசிகன்
-
அதிமுக கோட்டையில் ஓட்டை போடும் திமுக.. கொங்கு மண்டலத்தில் மாறும் களம்! Poll Tracker கருத்துக்கணிப்பு -
தமிழக வெற்றிக் கழகத்தின் அஸ்திவாரத்தை அசைத்த சர்வே.. ஆசையா இருந்தாங்களே.. தவெக விஜய்க்கு ஷாக்! -
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அம்போ! ஊதிய உயர்வும் அம்போ! தேர்தல் நேரத்தில் பறந்த கண்டனம்! -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
டூவீலரில் மோதிய எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாப்பு வாகனம்.. 28 வயது இளைஞர் உயிரிழப்பு.. பெரும் சோகம் -
TN Election history: முதலும் கடைசியும்.. 2 தேர்தல்கள்.. மருத்துவமனையில் படுத்தபடி ஜெயித்த எம்.ஜி.ஆர் -
அடிதடி..கோஷ்டி பூசல்! பழைய ஃபார்முக்கு திரும்பிய காங்கிரஸ்! செல்வப் பெருந்தகைக்கு எதிராக திரண்ட டீம் -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
தமிழக நிர்வாகிகளுக்கு அனுமதியில்லை.. காங்கிரஸ் வேட்பாளர் யார் யார்? மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவு -
ஒற்றை இலக்க பாஜக.. கேரளாவில் அடித்து தூக்கும் காங்.,. அப்போ கம்யூனிஸ்ட்? புதிய கருத்து கணிப்பு -
85% ஓவர்.. இன்னும் சில மணி நேரங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்.. செல்வப்பெருந்தகை அப்டேட்!












Click it and Unblock the Notifications