பாலுணர்வை தூண்டும் மாத்திரையால் வந்த வினை.. படுக்கையில் போன உயிர்.. அதிர்ந்த வருங்கால மனைவி
சென்னை: ஹரியானா மாநிலம் குருகிராமில் திருமண நிச்சயதார்த்தம் முடிந்த இளைஞர் ஒருவர், பாலியல் ஊக்க மருந்துகளை (Sex-enhancing drugs) அளவுக்கு அதிகமாக உட்கொண்டுள்ளார்.. இதனால் ஏற்பட்ட விபரீதம்தான் இரு குடும்பத்தினரையும் நிலைகுலைய வைத்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிரமான விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.. இதில் பெறப்பட்ட முதற்கட்ட தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் ரோஹித் லால் என்ற 28 வயது இளைஞர். குருகிராமில் பணியாற்றி வந்தார். இவருக்கும் ஒரு பெண்ணுக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது. விரைவில் திருமணம் நடைபெறவிருந்தது.

படுக்கையில் கிடந்த ரோஹித்
இந்நிலையில், சம்பவத்தன்று வழக்கமாக அவரது நண்பர்கள் பணிக்கு செல்வதற்காக ரோஹித் லாலுக்கு செல்போனில் தொடர்பு கொண்டனர். ஆனால் நீண்ட நேரமாகியும் செல்போன் எடுக்கவில்லையாம். அதனால் அவர் வசிக்கும் வீட்டிற்கு சென்று கதவை திறக்க முயன்றனர். வீட்டின் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த நண்பர்கள் குருகிராம் போலீசாருக்கு தகவல் தந்துள்ளனர்..
போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது, ரோஹித் படுக்கையில் உயிரிழந்து கிடப்பதை கண்டனர். இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். அந்த இளைஞரின் மரணத்திற்கான காரணம் குறித்துப் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது.
பாலுணர்வை தூண்டும் மாத்திரை
காவல்துறையினரின் முதற்கட்டத் தகவலின்படி, நிச்சயம் முடித்த பெண்ணை தன்னுடைய வீட்டுக்கு வர சொல்லியிருந்தாராம் ரோஹித்.. அதற்கு முன்னதாக அளவுக்கு அதிகமான பாலியல் ஊக்க மருந்துகளை உட்கொண்டது தெரியவந்துள்ளது. அவர் பாலுணர்வை தூண்டும் மாத்திரை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதால் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போஸ்ட் மார்ட்டம் நடத்தி உடலை லால் குடும்பத்தினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் சொல்லும்போது, "அதிகப்படியான மருந்து உட்கொண்டதே (Overdose) இளைஞரின் மரணத்திற்கு முதன்மைக் காரணமாக இருக்கலாம்.. சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட தடயங்கள் மற்றும் மருத்துவக் குறிப்புகளைக் கொண்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளனர்.
உயிருக்கே ஆபத்தான மாத்திரைகள்
முறையான மருத்துவ பரிந்துரையின்றி இது போன்ற மருந்துகளை உட்கொள்வது உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. திருமணக் கனவுகளுடன் இருந்த இளைஞரின் இந்த எதிர்பாராத மறைவு அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த ரோஹித், புதுடெல்லியில் உள்ள இந்திய தரக் கவுன்சிலில் பணிபுரிந்து வந்துள்ளார்.. டெல்லியில் உள்ள குருகிராமின் செக்டர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தாராம்.. இந்த நேரத்தில்தான் அவருக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளது.
உல்லாசமாக இருக்க பிளான்
வருங்கால மனைவியை சந்தித்து உல்லாசமாக இருப்பதற்காக அழைத்து இருந்தாராம். இந்த குஷியில் அதிக மாத்திரை உட்கொண்டதாகவும் தெரிகிறது. ஆனால் அந்த பெண் வருவதற்கு முன்பேயே புதுமாப்பிள்ளை படுக்கையிலேயே இறந்துவிட்டார்..
அவரது அருகில் பாலியல் உணர்வை தூண்டும் மாத்திரைகள் சிதறி கிடந்ததாம்.. இவைகளை போலீசார், மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.. டாக்டர்கள் அறிவுரையின்றி மாத்திரையை சாப்பிட்டது, ஹார்ட் அட்டாக் வரை கொண்டு சென்று விட்டுள்ளது..!!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications