அதெப்படி திமிங்கலம்.. சிக்னலை மீறினால் 500 தான் அபராதமே.. காரில் போனவருக்கு 1500 அபராதம் எப்படி?
சென்னை : சென்னையில் சிக்னல் விதிமீறல் குற்றத்திற்காக காரில் சென்ற ஒருவருக்கு 1500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சிக்னல் விதிமீறலுக்கு 500 அபராதம் விதிக்கப்படும் நிலையில், ஏன் தனக்கு மட்டும் 1500 விதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து சென்னை போக்குவரத்து போலீசை டேக் செய்து ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு காவல்துறை அளித்த விளக்கத்தை பாருங்கள்.
சென்னையில் போக்குவரத்து விதிமீறலை தடுக்க அபராதம் கடுமையாக விதிக்கப்படுகிறது. வார இறுதி நாட்களான இப்போது இரவு நேரங்களில் மது அருந்துவோரை குறிவைத்து பிடிப்பார்கள். அப்படி சிக்கினால் அவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.இதுபொதுவான நடைமுறை தான்.

விபத்துக்களை தடுக்க மதுபோதையில் செல்வோரை பிடித்து அபராதம் விதிக்கிறார்கள். வாரஇறுதிகளில் தான் அதிகம் பேர் மது அருந்திவிட்டு செல்வார்கள் என்பதால் இப்படி பிடித்து அபராதம் விதிக்கிறார்கள். அதேநேரம் சிக்னலை மீறி செல்பவர்களுக்கும் போலீசார் தற்போது அதிகமாக அபராதம் விதிக்கிறார்கள். போலீசார் நடத்திய வாகன சோதனையில் மற்றும் பொதுமக்களின் புகாரின் அடிப்படையிலும் அபராதம் விதிக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் தானியாங்கி கேமரா எடுத்த புகைப்படங்களின் அடிப்படையிலும் அபராதம் விதிக்கப்படுகிறது. அப்படித்தான் திருவிக்ரமன் என்பவருக்கு அபராதத்தை சென்னை போலீஸ் விதித்துள்ளது.
இதுதொடர்பாக விளக்கம் கேட்டு அவர் ட்விட்டரில் வெளியிட்டிருந்த பதிவில், எனது வாகனத்தின் மீது சிக்னல் மீறல் குற்றத்திற்காக ரூ.1500 அபராதம் விதித்துள்ளீர்கள். அபராதத் தொகை நிலுவையில் இல்லை என்பதை உறுதிப்படுத்த நான் இந்த அபராதத் தொகையைச் செலுத்தியுள்ளேன், இருப்பினும் இந்த அபராதம் குறித்து உங்களிடம் சில விளக்கங்களைப் பெற விரும்புகிறேன்.
1. படத்தின் மீறல், எனது வாகனம் ஸ்டாப் லைனைத் தாண்டி கிட்டத்தட்ட 30 அடி தூரம் இருப்பதைக் காட்டுகிறது. நான் கோட்டைக் கடக்கும்போது சிக்னல் பச்சை அல்லது மஞ்சள் நிறத்தில் இல்லை என்பதை நான் எப்படி அறிவேன். இதற்கு தேவையான ஆதாரத்தை காட்ட முடியுமா?
2. சிக்னல் விதிமீறல் அபராதமாக என்னிடம் மட்டும் ரூ. 1500 விதித்துள்ளீர்கள். ஆனால் சிக்னல் விதிமீறலுக்கு ரூ. 500 மட்டுமே அபராதமாக விதிக்கப்படும்.
மேலே குறிப்பிட்டுள்ள கேள்விகளுக்கு தயவு செய்து கொஞ்சம் விளக்கம் தர முடியுமா? இந்த விஷயத்தில் நீங்கள் பதில் அளித்தால் சிறப்பாக இருக்கும் என்று கூறியிருந்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள சென்னை போக்குவரத்து போலீசார், "சிக்னலின் அடிப்படையில் மீறுபவர்களை தானாகவே கண்டறியும் ட்ரோஸ் அமைப்பால் (தனியாங்கி கேமரா அபராதம் முறை) சலான் போடப்பட்டிருக்கிறது. நீங்கள் சிக்னலைக் கடந்து ஸ்டாப் லைனுக்கு அப்பால் நின்றதால், உங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முதல் முறை சிக்னலை மீறினால் மட்டும் தான் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறையாகவோ அல்லது அடிக்கடி மீறினாலோ 1500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அப்படித்தான் 1500 ரூபாய் அபராதம் விதித்துள்ளோம்" என்று கூறியுள்ளனர். அத்துடன் அவர் சிக்னலை மீறியதற்கான ஆதாரத்தையும் புகைப்படங்களாக வெளியிட்டுள்ளனர்.
சென்னையை பொறுத்தவரை சிக்னலில் போலீஸ் இல்லையே என்று மீறி போய்விடாதீர்கள்.. அப்படி சென்றால் அபராதம் உங்கள் மொபைலுக்கே தானியாங்கி கேமரா அனுப்பிவிடும். இந்த முறை அபராதம் சென்னையின் சில சிக்னலில் நடைமுறையில் உள்ளது. எனவே கவனமாக இருக்க வேண்டும்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications