சென்னையில் முக்கிய சிக்னலில் நெட்டிசன் எடுத்த ஒற்றை போட்டோ.. மொத்தமாக சிக்கின வாகன ஓட்டிகள்!
சென்னை: சென்னை வடக்கு ரயில் நிலையம் எதிரே தினந்தந்தி சிக்னலில் பாதசாரிகள் கடக்கக்கூடிய பாதையில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி சிக்னலுக்காக காத்திருந்த 3 இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து சிக்னலை மீறி சென்றாலோ அல்லது சிக்னலில் உள்ள பாதசாரிகள் லைனில் போய் சிக்னலில் காத்திருந்தாலோ கண்டிப்பாக அபராதம் விதிப்பார்கள். போலீஸ் இருந்தால் அபராதம் என்று இல்லை.போலீஸே ஆன்ஸ்பாட்டில் இல்லாவிட்டாலும், பொதுமக்களின் புகாரின் பேரில் அபராதம் விதிப்பார்கள்.

சென்னையில் மற்ற ஊர்களை போல் ஹெல்மெட் அணியாமலோ அல்லது இருசக்கர வாகனத்தில் 3 பேர் செல்வதோ நிச்சயம் கடினமானது.மற்ற ஊர்களில் அபராதம் போலீஸ் தான் விதிப்பார்கள். இங்கு அப்படி இல்லை.. உங்களை யாராவது புகைப்படம் எடுத்து புகார் அளித்தாலும் அபராதம் விதிப்பார்கள். எனவே கவனமாக செல்ல வேண்டும்.
அதேபோல் நீங்கள் பைக் வாங்கும் போதே இரண்டு ஹெல்மெட் வாங்கிவிடுவது நல்லது. ஒரு ஹெல்மெட் மட்டும் வாங்கினாலும் 500 ரூபாய் அபராதம் நிச்சயம் உங்களுக்கு விதிக்கப்பட வாய்ப்பு. அதாவது நீங்கள் ஹெல்மெட் போட்டு உங்கள் பின்னால் உள்ளவர் ஹெல்மெட் போடாமல் சென்றால் 500 ரூபாய் அபராதம் உறுதியாகிவிடும். சென்னையில் இந்த விதிமுறை மிக தீவிரமாக பின்பற்றப்படுகிறது.
தலைகவசம் அணியாமல், இருசக்கர வாகனத்தில் 3 பேர் சென்றால் அபராதம் நிச்சயம் அதிகமாக இருக்கும்.சென்னையில் பல இடங்களில் தானியாங்கி கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. இந்த கேமராக்கள் தானாகவே புகைப்படம் எடுத்து அபராதம் விதிக்கும்
இந்த தானியாங்கி கேமராக்கள் சென்னையில் முக்கிய சிக்னலில் நிற்காமல் மீறி சென்ற கார்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கின்றன. ஒருவழி பாதையில் சென்றாலும் சில பகுதிகளில் அபராதம் உறுதி. சிக்னலில் லைன் கோட்டை தாண்டி நின்றாலும் அபராதம் விதிக்கப்படுகிறது.
இதுதவிர சென்னையில் போக்குவரத்து போலீசார் காலை, மதியம் மற்றும் மாலை வேளைகளில் சோதனை நடத்துகிறார்கள் . அதேநேரம் பொதுமக்களும் தங்கள் கண் முன்னே யாராவது போக்குவரத்து விதிகளை மீறி சென்றால் உடனே சென்னை போக்குவரத்து போலீசாரை ட்விட்டரில் டேக் செய்து புகார் அளிக்கிறார்கள். அப்படி புகார் அளித்தால் உடனே நடவடிக்கையும் எடுக்கிறார்கள். போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு ஆன்லைனிலேயே அபராதமும் விதிக்கிறார்கள்.
குழந்தையை பள்ளிக்கு விட வந்தவர்கள் தொடங்கி, பக்கத்து தெருவில் காய் வாங்க போனவர்கள் வரை ஹெல்மெட் அணியாமல் போய் சென்னையில் பலர் தினமும் அபராதம் செலுத்தி வருகிறார்கள் .சென்னையில் போக்குவரத்து போலீசார் தினமும் ட்விட்டரில் பொதுமக்களின் புகார்களுக்கு பதில் அளித்து நடவடிக்கை எடுத்து சலானை ட்விட்டரில் பதிவிடுகிறார்கள்.
அப்படித்தான் சென்னை வடக்கு ரயில் நிலையம் எதிரே தினந்தந்தி சிக்னலில் பாதசாரிகள் கடக்கக்கூடிய பாதையில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி சிக்னலுக்காக காத்திருந்த 3 இருசக்கர வாகன ஓட்டிகள் குறித்து நெட்டிசன் ஒருவர் சென்னை போக்குவரத்து போலீசாரை டேக் செய்து கோரிக்கை வைத்தார். அவர்கள் அனைவருக்கும் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு சலான் ட்விட்டரில் ஷேர் செய்யப்பட்டுள்ளது. எனவே சிக்னலில் போடப்பட்டுள்ள ஸ்டாப் லைனை தாண்டி நிற்காதீர்கள். அபராதத்தில் சிக்கி கொள்ளாதீர்கள்
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications