விமானத்தில் மோதிய டிராக்டர்.. பரபரத்த சென்னை ஏர்போர்ட்.. திருச்சிக்கு விமான சேவைகள் ரத்து!
சென்னை: சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் டிராக்டர் மோதி விமானம் சேதமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், இண்டிகோ விமானத்தின் மீது டிராக்டர் மோதி விபத்து ஏற்பட்டு விமானம் சேதமடைந்துள்ளது. பயணிகளின் உடமைகளை ஏற்றிச் சென்ற டிராக்டர் விமானத்தில் மோதியது. விமானம் சேதமடைந்ததால் திருச்சிக்கான 24 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து இண்டிகோ நிறுவனம் கூறுகையில், "பயணிகளின் உடைமைகளை ஏற்றிச் சென்ற டிராக்டர், விமானத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை முதல் திருச்சி வரை செல்லும் இண்டிகோ விமானத்தின் 24 சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சேதமடைந்த விமானம் சரி செய்யப்பட்டு வரும் 22ஆம் தேதி முதல் மீண்டும் விமான சேவை தொடங்கும்' என்று தெரிவித்துள்ளது.
மேலும், பயணத்தை ரத்து செய்த பயணிகளுக்கு அவர்கள் செலுத்திய கட்டணம் திருப்பிச் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சிறிய அளவிலான இந்த விபத்து குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications