ஆல் தி பெஸ்ட் மேம்.. குட்டி பாப்பாவின் சூப்பர் வாழ்த்து.. நெகிழ்ந்து மகிழ்ந்த தமிழிசை!
சிறுமி ஒருத்தி தமிழிசைக்கு ஆங்கிலத்தில் வாழ்த்து சொல்லி உள்ளாள்
சென்னை: "ஐ விஷ் யூ ஆல் தி பெஸ்ட் மேம்" என்று தமிழிசைக்கு ஆங்கிலத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார் ஒரு சிறுமி.
தமிழக பாஜக தலைவராக பதவி வகித்த தமிழிசை, தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் தமிழகத்தில் மட்டுமே அறியப்பட்ட, தமிழிசை இன்று நாடு தழுவிய அளவில் அறியப்பட்டு வருகிறார்.

இதனால் பாஜக மட்டுமின்றி எதிர்க்கட்சிகள், மாற்றுகட்சிகள், என அனைத்து தரப்பினரும் தமிழிசைக்கு வாழ்த்து சொல்லி வருகிறார்கள். ஆளுநராக அறிவிப்பு வந்த கொஞ்ச நேரத்திலேயே நம்ம ஆட்கள் மீம்களையும் ரெடி பண்ணிவிட்டார்கள்.
வாழ்த்துக்களால் நெகிழ வைத்த சிறுமி ஆயுஷிக்கு எனது வாழ்த்துக்கள்... pic.twitter.com/svzS0OnIgv
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) September 2, 2019
"தமிழிசை இனி தெலுங்கிசை" என அழைக்கப்படுவார் என்பது உள்ளிட்ட பல மீம்கள் வைரலாகி வரும் நிலையில், சிறுமி ஒருத்தி ஆங்கிலத்தில் வாழ்த்து சொல்லி இருக்கிறாள். இந்த வீடியோவை தமிழிசை தனது ட்விட்டரில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
சிறுமி பேசும்போது,"இது எங்களுக்கெல்லாம் பெருமையான தருணம், இந்த வெற்றி உங்களது கடினமான உழைப்புக்கும், போராட்டத்துக்கும் கிடைத்த பரிசு, உங்களுக்கு என் வாழ்த்துக்கள்" என்று தெரிவித்தாள். சிறுமி வாழ்த்து சொல்லி முடிக்கும்வரை, அவளது தோளின் மீது கைப்போட்டு கொண்டு ஏகப்பட்ட சந்தோஷத்துடன் அதை உன்னிப்பாக கவனிக்கிறார் தமிழிசை.
எவ்வளவு வாழ்த்துக்கள் தமிழிசைக்கு குவிந்து வந்தாலும், இந்த வாழ்த்து கொஞ்சம் ஸ்பெஷல்தான். அதனால்தான், ''வாழ்த்துகளால் நெகிழ வைத்த சிறுமி ஆயுஷிக்கு எனது வாழ்த்துகள்'' என்று தமிழிசை கேப்ஷன் போட்டு பூரித்துள்ளார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications