சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நம்பிக்கை இருந்துச்சு... நாலா திசையிலும் உள்ளடி வேலை பார்த்தா எப்படி சார்? பொங்கும் பாஜக வேட்பாளர்

Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட பாஜக பிரமுகர்களில் ஒருவர் நிச்சயம் வெல்வார் என பெரும் எதிர்பார்ப்புக்குரியவராக இருந்தார். ஆனால் பாஜகவிலும் அதிமுகவிலும் அத்தனை திசைகளிலும் உள்ளடி வேலை பார்த்த தகவல் அடுத்தடுத்து வந்து கொண்டே இருப்பதால் அந்த பிரமுகர் மிகவும் வேதனையில் உள்ளாராம்.

சிஸ்டம் ஃபெயிலியர்.. அரசியலை விட்டுவிட்டு; மக்களுக்கு உதவ வாருங்கள்.. காங்கிரஸாருக்கு ராகுல் அழைப்பு சிஸ்டம் ஃபெயிலியர்.. அரசியலை விட்டுவிட்டு; மக்களுக்கு உதவ வாருங்கள்.. காங்கிரஸாருக்கு ராகுல் அழைப்பு

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணி உறுதியாவதற்கு முன்பே சில தொகுதிகளை பாஜக தானாக எடுத்துக் கொண்டது. அப்படி எடுத்துக் கொண்ட ஒரு தொகுதியை அதிமுகவும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் கொடுத்தது.

வெற்றி மீது நம்பிக்கை

வெற்றி மீது நம்பிக்கை

ஏனெனில் அந்த பாஜக பிரமுகரின் டெல்லி செல்வாக்கு அப்படி. அத்துடன் அதிமுக சீனியர்களும் அந்த பாஜக பிரமுகருடன் நல்லுறவில் இருந்து வந்தனர். இதனால் வெற்றி நமதே என்ற நம்பிக்கையில் தொகுதி முழுக்க வலம் வந்தார்.

உள்ளடி வேலையில் அதிமுக

உள்ளடி வேலையில் அதிமுக

கட்சி பிரமுகர் என்பதால் அவருக்கு ஊடக வெளிச்சமும் நன்றாகவே கிடைத்தது. ஆனால் தொடக்கம் முதலே அதிமுக சீனியர் சொல்லையும் மீறி அக்கட்சி லோக்கல் நிர்வாகிகள் சுணக்கம் காட்டி இருக்கின்றனர். ஒரு கட்டத்தில் எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளருக்கு வாக்கு கேட்டனராம் அதிமுக நிர்வாகிகள்.

பாஜகவின் ஐவர் அணி

பாஜகவின் ஐவர் அணி

இந்த தகவலே வாக்குப் பதிவுக்கு பின்னர்தான் பாஜக பிரமுகருக்கும் அதிமுக சீனியருக்கும் தெரியவந்தததாம். தற்போது பாஜக பிரமுகருக்கு எதிரான பாஜகவின் ஐவர் அணி ஒன்றும் கங்கணம் கட்டி அவருக்கு எதிராக தொகுதிக்குள் மறைமுகமாக உள்ளடி வேலை செய்ததாம்.

வேதனையில் பாஜக பிரமுகர்

வேதனையில் பாஜக பிரமுகர்

இது அந்த வேட்பாளர் பிரமுகருக்கு கிடைத்த லேட்டஸ்ட் தகவல். இதனால் எப்படியும் ஜெயிச்சிடுவோம்னுதான் தொடக்கம் முதலே நம்பிக்கையா இருந்தேன்.. வாக்குப் பதிவு அன்னைக்கும் நம்பிக்கை இருந்துச்சு.. தேர்தலுக்கு பின்னாடி வரும் ஒரு தகவல் கூட நம்பிக்கையை தரலையே.. என பொங்கிக் கொண்டிருக்கிறாராம் அந்த பிரமுகர்.

English summary
Here is a gossip on Tamilnadu Assembly Election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X