சென்னை அரிசி குடோனில் விஷம் குடித்து உயிரை விட்ட இளம் பெண்.. பதற்றம்.. பெற்றோர் முற்றுகை
சென்னை : சென்னை புது வண்ணாரப்பேட்டையில் அரிசி குடோனில் பணிபுரிந்த பட்டதாரி பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தண்டையார்பேட்டை 4வது சந்து பகுதியை சேர்ந்தவர் சோலையப்பன் இவரது மகள் வரலட்சுமி வயது 21 தண்டையார்பேட்டை கேப்டன் மஹால் அருகே உள்ள அரிசி குடோனில் கடந்த 10 மாதங்களாக குவாலிட்டி டிபார்ட்மெண்டில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று காலை வேலைக்கு வந்த அந்த பெண் வீட்டிற்கு மதியம் 2 மணி அளவில் அரிசியில் வண்டு வராமல் இருக்க பயன்படுத்தும் மருந்து பவுடரை சாப்பிட்டுவிட்டு மயக்கமுற்று இருப்பதாக பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர் .

உடனே விரைந்தனர்
இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பெற்றோர்கள் தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்

எப்படி நடந்தது
ஆபத்தான முறையில் சிகிச்சை பெற்று வந்த வரலட்சுமி நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளித்துள்ள நிலையில், இன்றைய தினம் பெற்றோரும் உறவினரும் அரிசி குடோனை முற்றுகையிட்டனர்.

ஆம்புலன்ஸ்
வரலட்சுமி விஷமருந்தி இருந்த போது அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லாதது ஏன் என்றும் ஆம்புலன்ஸ்க்கு கூட போன் செய்யவில்லை என குற்றம் சாட்டி உரிமையாளரிடம் இதுகுறித்து கேட்டதற்கு கண்காணிப்பு கேமரா வேலை செய்யவில்லை என அலட்சியமாக பதில் கூறுவதாகவும் இதுகுறித்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வரலட்சுமியின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மகளுடன் தற்கொலை
ஈரோடு அருகே ஐந்து வயது மகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள காங்கேயம்பாளையத்தில் சேர்ந்தவர் விஸ்வநாதன், தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரம்யா, இவர்களுக்கு ஐந்து வயதில் பவன்யா என்ற மகள் உள்ளார்.

பல இடங்களில் தேடினர்
இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் கணவர் வேலைக்கு சென்ற பின்பு வீட்டில் இருந்த ரம்யா, மகளை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள தனியாருக்குச் சொந்தமான கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்ற இருவரும் நீண்ட நேரமாகியும் வராததால் ரம்யாவின் தந்தை கதிர்வேல் பல இடங்களில் தேடியுள்ளார்.

கண்டுபிடித்தனர்
அப்போது கிணற்றின் அருகே ரம்யாவின் செருப்பு உள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கிணற்றை எட்டிப் பார்த்துள்ளார். அப்போது ரம்யா சடலமாக கிணற்றில் மிதந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கதிர்வேல் சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் கிணற்றில் குதித்து இருவரின் சடலத்தை மீட்டனர்.

போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த மொடக்குறிச்சி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பிரேதத்தை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து மொடக்குறிச்சி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications