"ஆணழகன்" போட்டியாளர்.. கட்டுமஸ்தான உடம்பு.. ஜிம்மில் வெயிட் தூக்கிய டிரெய்னர் பலி.. அலறிய சென்னை
சென்னை: சென்னை கொரட்டூரில் உள்ள ஜிம்மில் மயங்கி விழுந்து ஜிம் டிரெய்னர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீப நாட்களாக தமிழ்நாட்டில் ஜிம்மில் பயிற்சி செய்யும் பலர் மாரடைப்பு வந்து பலியாவது வழக்கம் ஆகி வருகிறது. இது போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. கடந்த வருடம் ஜூன் 4 அன்று, மதுரை பழங்காநத்தத்தில் உடற்பயிற்சியை முடித்த இளைஞர் ஸ்ரீ விஷ்ணு ஜிம்மில் சுருண்டு விழுந்து பலியானார். சக ஜிம் உறுப்பினர்கள் 27 வயதான ஸ்ரீ விஷ்ணுவை எல்பி மருத்துவமனைக்கும் பின்னர் மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர்.
அங்கு மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக அறிவித்தனர். வெறும் 27 வயதில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு பலியானார். எந்த கெட்ட பழக்கமும் இல்லாத அந்த இளைஞர் ஜிம்மில் பலியானது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
அதேபோல் கடந்த மார்ச் மாதம் ஆவடியைச் சேர்ந்த 25 வயதான பாடிபில்டர் மற்றும் ஜிம் பயிற்சியாளர் ஸ்டெராய்டுகள் மற்றும் பிற சப்ளிமெண்ட்ஸ்களை அதிகமாக உட்கொண்டதால் இறந்ததாக மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் அந்த நபரின் குடும்பத்தினர் தெரிவித்தனர். நெமிலிச்சேரியில் வசிக்கும் சபரிமுத்து என்ற ஆகாஷ், 25, உடற்கட்டமைப்பு போட்டிக்கு தயாராகி கொண்டிருந்தார். இதற்காக அவர் மருந்துகளை எடுத்து இருந்தார்.

இதில் அவர் கிட்னி செயல் இழந்தது. அதை தொடர்ந்து அவரின் மற்ற உறுப்புகள் செயல் இழந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அந்த இளைஞர் பலியானார். அதிலும் சாவதற்கு கடந்த சில நாட்கள் முன்பு வரை மூச்சு விட முடியாமல் அவர் கடுமையாக திணறினார். அதேபோல் தமிழ்நாட்டில் மட்டுமின்றி மற்ற சில மாநிலங்களிலும் இதேபோல் ஜிம்மில் இளைஞர்கள் பலியாவது அதிகரித்து வருகிறது.
முக்கியமாக கொரோனாவிற்கு பின் இப்படி பலர் ஜிம்மிலேயே பலியாகி வருகின்றனர். பலருக்கும் மாரடைப்பு ஏற்படுவது வழக்கம் ஆகி உள்ளது. ஸ்டெராய்டு ஓவர் டோஸ் காரணமாக மரணம் ஏற்படுவதை கூட ஏற்றுக்கொள்ள முடியும் . ஆனால் இந்த சாதாரண மரணங்கள் ஜிம் பயிற்சி, கொரோனாவிற்கு பின்பான மாரடைப்பு வாய்ப்புகள் ஆகியவை மீது கடும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.,
இன்று மீண்டும் மரணம்: இந்த நிலையில்தான் இன்று சென்னை கொரட்டூரில் உள்ள ஜிம்மில் மயங்கி விழுந்து ஜிம் டிரெய்னர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரின் பெயர் ஏபின் என்று கூறப்படுகிறது. அங்கே தினமும் பலருக்கும் பயிற்சி கொடுத்து வருகிறார் இவர். தானும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
( காசி தியேட்டர் பக்கத்தில்.. காலையிலேயே அதிர்ச்சி.. தூக்கி அடித்த அரசு பேருந்து.. ஓடி வந்த மக்கள்! )
இவர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த நிலையில் மயங்கி விழுந்து உயிரிழந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்து உள்ளது. பயிற்சி செய்யும் போது மயக்கம் வந்துள்ளது. இதனால் புத்துணர்ச்சியாக உணர இவர் ஜிம் குளியல் அறைக்கு சென்றுள்ளார். அங்கே குளிக்கும் போதே இவர் மயங்கி விழுந்து உள்ளார் . பல மணி நேரம் ஆகியும் அவர் வெளியே வராத காரணத்தால் உள்ளே சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது அவர் பலியாகிவிட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
மருத்துவமனையில் செய்யப்பட்ட சோதனையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆணழகன் போட்டிக்கு தயாராகி வந்த நிலையில் அந்த ஜிம் டிரெய்னர் பலியானதாக கூறப்படுகிறது.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications