காசி தியேட்டர் பக்கத்தில்.. காலையிலேயே அதிர்ச்சி.. தூக்கி அடித்த அரசு பேருந்து.. ஓடி வந்த மக்கள்!
சென்னை: சென்னை ஜாபர்கான்பேட்டை காசி திரையரங்கு அருகே காலையில் ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் பலியானார்.
சென்னை ஜாபர்கான்பேட்டை காசி திரையரங்கு மிகவும் நெருக்கடியான பகுதியாகும். ஜிஎஸ்டி சாலையில் உள்ள பகுதி மிகவும் நெருக்கடியான இடம் ஆகும். கிண்டி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளை வடபழனி, கோயம்பேடு உடன் இணைக்க இந்த சாலை பயன்படுத்தப்படும்.

பொதுவாக காசி தியேட்டர் சிக்னல் என்று இந்த சிக்னல் அழைக்கப்படும். இரண்டு பக்கமும் சிக்னல் இருக்கும். இன்னொரு பக்கம் ராயல் என்பீல்ட் பக்கமும், சென்னை மொபைல்ஸ் பக்கத்தில் இருந்தும் வாகனங்கள் வரும் வகையில் சாலைகள் அங்கே இணைக்கப்பட்டு உள்ளன.
இங்கே இரவு நேரங்களில் சிக்னல் இயங்காது. எல்லா சிக்னலும் போல.. இரவு நேரங்களில் இங்கே மஞ்சள் சிக்னல் இயங்கும் . அதாவது இங்கே சிக்னல் உள்ளது. இதனால் மக்கள் கவனமாக கடக்க வேண்டும். அதேபோல் வாகனங்கள் கொஞ்சம் மெதுவாக செல்ல வேண்டும் என்று விதி உள்ளது.
இணைப்பு சாலை: இங்கே வாகனங்கள் பொதுவாக வேகமாக செல்வது வழக்கம். அதிலும் அதிகாலையில் வேகமாக செல்வது வழக்கம். சிக்னல் இயங்காது என்பதால் கோயம்பேடு செல்லும் வாகனங்கள் இங்கே வேகமாக செல்லும்.
முக்கியமாக ஆம்னி பேருந்துகள், அரசு பேருந்துகள், விரைவு பேருந்துகள் என்று இங்கே காலையில் பேருந்துகள் மிக வேகமாக இயங்கும். இந்த நிலையில்தான் சென்னை ஜாபர்கான்பேட்டை காசி திரையரங்கு அருகே காலையில் ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் பலியானார்.
சிக்னலைக் கடக்க முயன்ற ஐடி பொறியாளர் ரிஷி கெளதம் பேருந்து மோதி பலி ஆனார். அரசு விரைவு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பலி ஆனார். விபத்து குறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
சிக்னல் இயங்காத நிலையில் வாகனம் வேகமாக வந்துள்ளது. அப்போது சிக்னல் இயங்காததை பயன்படுத்தி ரிஷி கெளதம் சாலையை கடக்க முயன்று உள்ளார். அப்போது கிண்டியில் இருந்து கோயம்பேடு நோக்கி வாகனம் வேகமாக வந்துள்ளது.
மிக வேகமாக வந்த அரசு பேருந்து ஜீப்ரா கிராஸில் ரிஷி கெளதமை அடித்து தூக்கி உள்ளது. இதையடுத்து அதிகாலையில் அங்கே வாக்கிங் சென்ற நபர்கள்.. அங்கே டீ குடிக்க நின்ற நபர்கள் உடனே ஓடி வந்துள்ளனர். ஆனால் ரிஷி கெளதம் ரத்த வெள்ளத்தில் அங்கேயே மிதந்து உள்ளார்.
இதனால் சம்பவ இடத்தில் அவரை தூக்க கூட முடியவில்லை. அவரின் உடல் நசுங்கி இருந்ததால் அவரை தூக்க கூட முடியவில்லை. இதனால் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வத்திலும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கே வந்த ஆம்புலன்ஸ் அவரின் உடலை எடுத்து சென்றுள்ளது. இதில் ரிஷி கெளதம் பலியாகிவிட்டதை உறுதி செய்துள்ளனர்.
இந்த சம்பவம் அதிகாலையிலேயே காசி தியேட்டர் சாலையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விபத்து குறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை செய்துள்ளனர். பேருந்து ஓட்டுனரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications