அதிமுக ஓட்டு திமுகவுக்கு போச்சா? ஆர்கே நகர் வரலாறு தெரியுமா? டேட்டாவோடு வந்த ரத்தத்தின் ரத்தங்கள்..!
சென்னை: விக்கிரவாண்டி இடை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், வெற்றி முகத்தில் இருக்கிறார் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா. இந்நிலையில் அதிமுக தேர்தலை புறக்கணித்த நிலையில், அக்கட்சி வாக்குகள் திமுகவுக்கு சென்று விட்டதாக கூறுகின்றனர் திமுகவினர். இந்நிலையில் ஆர்கே நகர் இடைத் தேர்தலை திமுக புறக்கணித்த போதும், 80% வாக்குகள் பதிவான நிலையில், ஜெயலலிதா பெரு வெற்றி பெற்றார் என்கின்றனர் அதிமுகவினர்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் அந்த கட்சியின் விவசாய தொழிலாளர் அணி செயலாளர் அன்னியூர் சிவா, பாமக சார்பில் வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் அன்புமணி, நாம் தமிழர் கட்சி அபிநயா உள்ளிட்ட 11 கட்சிகளின் வேட்பாளர்கள், 18 சுயேச்சைகள் என மொத்தம் 29 வேட்பாளர்கள் களமிறங்கினர்.
கடந்த 10ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையில், சுமார் 82.9 சதவீத வாக்குகள் அதாவது, ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 495 வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர். இது 82.48 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. மொத்தம் 95 ஆயிரத்து 536 ஆண்களும், 99 ஆயிரத்து 944 பெண்களும், 15 மூன்றாம் பாலினத்தவர் வாக்குப்பதிவு செய்து இருந்தனர். இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் 20 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் முன்னணில் நிலவரத்தில் அன்னியூர் சிவா வெற்றி வாய்ப்பில் நீடிக்கிறார். தற்போதைய நிலவரப்படி அன்னியூர் சிவா 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
இந்த நிலையில் தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தார் அதிமுக பொதுச்செயலாளரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி. ஆளுங்கட்சி அராஜகம், பணபலம், வாக்குச்சாவடிகளை பிடித்து தேர்தலை நியாயமாக நடத்த மாட்டார்கள் என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி அதற்கான விளக்கத்தையும் கொடுத்திருந்தார். இதனால் அதிமுக வாக்குகள் திமுகவுக்கும், பாமகவுக்கு செல்லும் என கூறி வந்தனர். மேலும், அதிமுகவினர் தங்களுக்கு வாக்களிக்க வேண்டுமென அன்புமணியும், திமுகவினர் வெளிப்படையாகவே கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் தற்போது தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கும் நிலையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு வாக்குகள் சென்றிருப்பதாக திமுகவினர் கூறி வருகின்றனர். கடந்த மக்களை தேர்தலில் அதிமுக போட்டியிட்ட போது விக்கிரவாண்டி தொகுதியில் மட்டும் சுமார் 1 லட்சத்து 80 ஆயிரம் வாக்குகள் பதிவாகியிருந்தது. தற்போது அதிமுகவை புறக்கணிப்பதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது 1 லட்சத்து 95 ஆயிரம் வாக்குகள் பதிவாகியுள்ளது. அதாவது கடந்த தேர்தலை விட சுமார் 3 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால் அதிமுகவினர் எடப்பாடி பழனிசாமியின் கருத்தை மதிக்காமல், குறிப்பாக பரம எதிரியான திமுகவுக்கு வாக்களித்துள்ளதாக திமுகவினர் கூறி வருகின்றனர். குறிப்பாக அதிமுக வாக்குகள் திமுகவுக்கு சென்று விட்டதாக கூறுகின்றனர் திமுகவினர். இந்நிலையில் ஆர்கே நகர் இடைத் தேர்தலை திமுக புறக்கணித்த போதும், சுமார் 80% வாக்குகள் பதிவான நிலையில், ஜெயலலிதா பெரு வெற்றி பெற்றார் என்கின்றனர் அதிமுகவினர். கடந்த 2015ஆம் ஆண்டில் ஜெயலலிதா சிறை சென்று வந்த பிறகு, சென்னை ஆர்.கே நகர் எம்.எல்.ஏ.வாக இருந்த அ.தி.மு.க.வின் வெற்றிவேல் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதை அடுத்து அந்த ஆண்டு ஜூன் 27-ந் தேதியன்று அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.
இத்தேர்தலில் அதிமுக சார்பில் முதல்வர் ஜெயலலிதா, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சி.மகேந்திரன் மற்றும் சுயேட்சையாக ட்ராஃபிக் ராமசாமி உட்பட 28 பேர் போட்டியிட்டனர். அந்த தேர்தலை புறக்கணிப்பதாக அப்போதைய திமுக தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி அறிவித்தார்.
2014 மக்களவைத் தேர்தலிலும், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலிலும் காவல்துறையினர் எந்த அளவுக்கு நியாயமாகவும், நேர்மையாகவும் நடந்துகொண்டனர் என்பதை அனைவரும் அறிவர். இந்த இடைத்தேர்தலில் ஜனநாயகம் எந்த அளவுக்கு மதித்துப் போற்றப்படும் என்று தெளிவாகத் தெரிகிறது. இடைத்தேர்தலில் போட்டியிடாமல் தவிர்த்து விடுவதே நல்லது என்று திமுக முடிவு செய்துள்ளது. எனவே, ஆர்.கே.நகர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக போட்டியிடாது என அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இதனையடுத்து பிரதான எதிர்க் கட்சியான திமுக இல்லாமல் களம் கண்ட அதிமுக வேட்பாளர் சுமார் ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றார். அந்த தேர்தலில் ஏறக்குறைய 78 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், ஜெயலலிதா 1,60,432 வாக்குகளையும், மகேந்திரன் 9,710 வாக்குகளையும், டிராபிக் ராமசாமி 4,590 வாக்குகளையும் பெற்றிருந்தார். இதன் மூலம், 1,50,722 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அப்படி பார்க்கும் போது திமுக வாக்குகள் அனைத்தும் ஜெயலலிதாவுக்கு சென்று விட்டதாகவே அர்த்தமா?
இடைத் தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது என எடப்பாடி பழனிசாமி அறிவித்தாரே ஒழிய, அதிமுகவினர் யாருக்கும் வாக்களிக்க கூடாது என அறிவிக்கவில்லை. மேலும் இடைத் தேர்தல் என்பதால், ஜாதி ஆதரவு, உள்ளூர் செல்வாக்கு, பண பலம் காரணமாக யாருக்கு வேண்டுமானலும் வாக்களித்திருக்கலாம், ஏன் பாமகவும் சுயேட்சைகளுக்கு கூட வாக்குகள் சென்றிருக்கலாம். ஆனால் வாக்கு சதவீதத்தை வைத்து அதிமுக வாக்குகள் திமுகவுக்கு தான் சென்றது என கூறி வருகின்றனர் அதிமுகவினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications