ஜோடிகளே ஜோடிகளே இந்த ஹோட்டலுக்கு மட்டும் தயவு செய்து போய் விடாதீங்க! 310 அறையை புக் செய்யாதீங்க!
Recommended Video

சென்னை: இளம் ஜோடிகளே இந்த ஹோட்டலுக்கு மட்டும் தயவு செய்து போய்விடாதீங்க. அப்படியே போனாலும் தங்கிவிடாதீங்க, அப்புறம் வருத்தப்படுவீங்க...
ஹோட்டல்கள் தான் எத்தனை ரகம்.. விதம் விதமான ஆப்ஷன்களுடன் வித்தியாசமான ஹோட்டல்கள் உலகெங்கும் பரவிக் கிடக்கின்றன.
நமக்குப் பிடித்த மாதிரி ஹோட்டலை இப்போது தேர்வு செய்து கொள்ள முடியும். அதை விட முக்கியமாக நமக்கு பிடித்த மாதிரி அறையைக் கூட மாற்றியமைக்கும் வாய்ப்புகள் இப்போது வந்து விட்டன.
[நான் ஏன் அந்த நேரத்துல ஓட்டலை தெரியுமா.. இந்த பஸ் டிரைவர் செய்த கூத்தைப் பாருங்க!]

களேபரம்
ஆனால் இந்த ஹோட்டல் கொஞ்சம் அல்ல அல்ல.. ரொம்பவே வித்தியாசமானது. அதாவது இந்த ஹோட்டலில் உள்ள சில அறைகளில் வைக்கப்பட்டுள்ள போர்டுகள்தான் களேபரத்தை கிளப்பியுள்ளன.

வாடிக்கையாளர்கள்
இந்த ஹோட்டல் அறைகள் சிலவற்றில் இங்கு செக்ஸ் வைத்துக் கொள்ள அனுமதி கிடையாது அதாவது ‘no sex allowed room'என்று போர்டே வைத்துள்ளனர். அதிலும் அந்த ரூம் நம்பர் 310. இதுதான் இந்த ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களை கலவரப்படுத்தியுள்ளது.

நூதனமாக இருக்கு
நோ ஸ்மோக்கிங் ஸோன், நோ ஸ்மோக்கிங் அறை என்று கூட பார்த்துள்ளோம். ஆனால் நோ செக்ஸ் போர்டு, அதுவும் ஹோட்டலில் போய் வைப்பது என்றால் கேட்கவே நூதனமாக இருக்கிறது இல்லையா. நம்பித்தான் ஆக வேண்டும்.

குழப்பம்
ரோபனேட்டர் Robonator7of9 என்ற பெயரில் ஒருவர் ரெட்டிட் தளத்தில் இது குறித்த தகவலைப் போட்டுள்ளார். அதுவும் அந்த போர்டுடன். குறிப்பிட்ட அறையை அவர் புக் செய்து சென்றபோது அங்கு இந்த போர்டு இருந்ததைப் பார்த்து குழம்பிப் போனார் ரோபனேட்டர்.

என்ன தண்டனை
கண்டிப்பாக இங்கு செக்ஸுக்கு அனுமதி கிடையாது. எந்த வகையான உடலுறவையும் இங்கு மேற்கொள்ளக் கூடாது. ஜாலியா கட்டி மட்டும் பிடிச்சுக்கலாம் என்று அதில் போடப்பட்டிருந்ததாம். அதேசமயம், விதியை மீறி நடந்து கொண்டால் என்ன தண்டனை என்ற விவரம் போர்டில் இல்லை.

போய்டாதீங்க...
ரொம்ப வித்தியாசமா இருக்கே.. ஜோடிகளே ஜோடிகளே இந்த ஹோட்டலுக்கு மட்டும் தயவு செய்து போய் விடாதீங்க.. உங்க நல்லதுக்குத்தான் சொல்றோம்.


Click it and Unblock the Notifications
