'திருடனுக்கு தேள் கொட்டியது போல்'.. சென்னை இளம் பெண்ணுடன் தனிமையில் ஜாலி.. ஓட்டல் ஓனருக்கு சிக்கல்
சென்னை: தான் கொடுத்த 2.50 லட்சம் கடனை திரும்ப கேட்ட சென்னையைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த ஓட்டல் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். பணத்தை திருப்பி கேட்டதால் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை கணவரிடம் காட்டுவதாக மிரட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கள்ளக்காதல் என்பது இருவருக்குமே கூர்மையான கத்தி போன்றது. ஆண், பெண் இருவரின் வாழ்க்கையை மொத்தமாக முடித்துவிடும். என்ன தான் கணவனோ அல்லது மனைவியோ ஒருமுறை தவறினை மன்னித்து ஏற்றுக்கொண்டாலும் பின்னாளில் அது அவர்களின் வாழ்நாள் முழுவதும் உறுத்தலாகவே இருக்கும். சரி செய்யவே முடியாத பிரச்சனையாகவே வந்து நிற்கும். நின்றால் குற்றம், நடத்தால் குற்றம், படுத்தால் குற்றம் என்பது சந்தேகத்தால் பல குடும்பங்கள் நிம்மதியை இழந்துள்ளன.

பல குடும்ப உறவுகளை சிக்கலாக்குவதே கள்ளக்காதல் தான். கள்ளக்காதல் பிரச்சனை காரணமாக இன்றைக்கு பல குடும்பங்களில் குற்றங்கள் நடக்கின்றன. கணவனுக்கு தெரியாமல் மனைவியும், மனைவிக்கு தெரியாமல் கணவரும் திருமணத்தை மீறி உறவில் இருப்பது அதிகரித்து வருகிறது. இந்த உண்மையை மறைத்து வைக்கும் அவர்கள், ஒரு நாள் உண்மை உடையும் போது, உடைந்து போகிறார்கள். அதேநேரம் இந்த உறவுகளை அறிந்த சிலர் மிரட்டி பணம் பறிக்கவும் செய்கிறார்கள். சிலரை கள்ளக்காதல் வைத்துள்ளவர்களே மிரட்டி பணம் பறிப்பது நடக்கிறது.. அப்படித்தான் சென்னையைச் சேர்ந்த பெண்ணுக்கு நடந்துள்ளது
சென்னை அய்யப்பன்தாங்கல் பகுதியைச் சேர்ந்த 35 வயதாகும் இளம்பெண் ஒருவர், சென்னை வியாசர்பாடி திருப்பூர் குமரன் தெருவைச் சேர்ந்த கோகுல்நாத்(வயது 33) என்பவருடன் நட்பாக பழகி வந்திருக்கிறார். பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் கோகுல்நாத் ஓட்டல் நடத்தி வருகிறார். அந்த பெண் கோகுல்நாத்திடம் 7½ லட்சத்தை கொடுத்து அந்த ஓட்டலில் பங்குதாரர் ஆகி உள்ளார்.
அதன்பிறகு இருவரும் திருமணத்தை மீறி உறவில் நெருங்கி பழகியதாக கூறப்படுகிறது. இருவரும் அந்தரங்கமாக நெருக்கமாக இருக்கும்போது அதனை கோகுல்நாத் தனது செல்போனில் புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டாராம். இதற்கிடையில் கோகுல்நாத்துக்கு தான் கடனாக கொடுத்த 2½ லட்சத்தை திருப்பி தரும்படி இளம்பெண் கேட்டிருக்கிறார். இதனால் அவர்களுக்குள் ஓட்டலில் சக ஊழியர்கள் முன் வாய்த்தகராறு ஏற்பட்டிருக்கிறது.
அப்போது கோகுல்நாத், "நாம் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை உனது கணவருக்கு அனுப்பி விடுவேன்" என மிரட்டி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண், இது குறித்து பெரவள்ளூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் நேற்று கோகுல்நாத்தை கைது செய்த பெரவள்ளூர் போலீசார், அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
-
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications