சொந்தபந்தம் கூடவா? ஓபிஎஸ் "இதை" எதிர்பார்த்து இருக்க மாட்டார்! 7 பேர் தரப்போகும் அதிர்ச்சி வைத்தியம்
சென்னை: அதிமுக பொதுக்குழு நெருங்கி வரும் நிலையில் ஓ பன்னீர்செல்வம் கேம்பில் இருக்கும் பல நிர்வாகிகள் எடப்பாடி பக்கம் தாவி வருகிறார்கள்.
அதிமுக பொதுக்குழு விவகாரம் உச்சம் அடைந்துள்ளது. ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவை கூட்ட எடப்பாடி தீவிரமாக முயன்று கொண்டு இருக்கிறார். இதற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் சட்ட போராட்டங்களை மேற்கொண்டுள்ளார்.
என்ன சட்ட போராட்டம் நடந்தாலும்.. அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இருக்கிறார்.

பொதுக்குழு
இந்த நிலையில் பொதுக்குழு நெருங்கி வரும் நிலையில் ஓ பன்னீர்செல்வம் கேம்பில் இருந்து பல நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி அணிக்கு மாறி வருகிறார்கள். கடந்த பொதுக்குழுவிற்கு முன்பே தென் மண்டல நிர்வாகிகள், முக்குலத்தோர், முன்னாள் அமைச்சர்கள் பலர் எடப்பாடி பக்கம் சாய்ந்தனர். 20 ஆக இருண்டஹ் மாவட்ட செயலாளர்கள் ஆதரவு 4 ஆக ஓ பன்னீர்செல்வத்திற்கு குறைந்தது. மாஃபா பாண்டியராஜன் போன்றவர்களும் கூட எடப்பாடி பக்கம் சென்றனர்.

வழக்கு
இந்த நிலையில்தான் ஜூலை 11ம் தேதி மேலும் சில நிர்வாகிகள் எடப்பாடி பக்கம் தாவ போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளனர். தேனியை சேர்ந்த மொத்தம் 7 முக்கியமான நிர்வாகிகள் எடப்பாடி பக்கம் செல்ல இருக்கிறார்களாம். போதிபுரம் ரவி, செயலாளர், சிவக்குமார், புதுப்பட்டி டவுன் பஞ்சாயத்து, ஜக்கையன், அமைப்புச் செயலாளர், சோலைராஜ், தேனி மாவட்ட பொருளாளர், கிருஷ்ணகுமார், தேனி நகர செயலாளர், தீபன் சக்கரவர்த்தி, ஓடப்பட்டி மனோகரன், பிசி பட்டி ஊராட்சி ஆகியோர் எடப்பாடி பக்கம் செயல் இருப்பதாக கூறப்படுகிறது.

அணி மாற்றம்
தேனியில் இருந்து பொதுக்குழுவில் மொத்தம் 59 நிர்வாகிகள் உள்ளனர். இதில் மேற்கண்ட 7 பேர் தவிர்த்து இன்னும் பலர் ஓ பன்னீர்செல்வம் அணியில் இருந்து வெளியேற உள்ளனர். முக்கியமாக ஓ பன்னீர்செல்வத்தின் தூரத்து உறவினர்கள் சிலர் கூட எடப்பாடி கேம்பிற்கு செல்ல இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் எல்லோரும் ஜூலை 11ம் தேதி எடப்பாடியை சந்தித்து பொதுக்குழு மேடையில் ஆதரவு தருவார்கள் என்று கூறப்படுகிறது.
Recommended Video

சொந்த பந்தம்
அதிமுகவில் சட்ட ரீதியாக பல அம்சங்கள் ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக உள்ளது. சட்டப்படி அவர் ஒருங்கிணைப்பாளர் என்பதால் அதை வைத்து கட்சியில் காய் நகர்த்தி வருகிறார். ஆனால் சட்டம் இவருக்கு ஆதரவாக இருந்தாலும் நிர்வாகிகள் பெரும்பாலும் எடப்பாடிக்கு ஆதரவாகவே உள்ளனர். இப்போது அவரின் சொந்த மண்ணிலேயே நிர்வாகிகள் அவர் பக்கம் சாயாமல் எடப்பாடி பக்கம் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
-
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
GOAT படத்துல Traffic Police மாதிரி பேசிட்டு.. இது சினிமா இல்ல! மக்கள் பணி! அமைச்சரை விளாசிய அதிமுக! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள்












Click it and Unblock the Notifications