என் பிள்ளை போச்சே.. மெரினா கடலில் மூழ்கிய மாணவன்.. விடுமுறையின் தொடக்கத்திலேயே சோகம்
சென்னை: காலாண்டு விடுமுறை தொடங்கியுள்ள நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் வாலிபால் விளையாடிவிட்டு கடலில் குளிப்பதற்காகச் சென்ற பிளஸ் 2 மாணவர் கடலில் மூழ்கி மாயமான சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. மாணவரைத் தேடும் பணியில் தீயணைப்புத் துறை வீரர்கள் உள்ளிட்ட வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் தற்போது காலாண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இன்றுடன் காலாண்டுத் தேர்வுகள் நிறைவடைகின்றன. செப்டம்பர் 28, 29, 30, மற்றும் அக்டோபர் 1, 2 என ஐந்து நாட்கள் மட்டும் காலாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர் சங்கம், விடுமுறையை நீட்டிக்க கோரிக்கை வைத்திருந்தது.

இந்தக் கோரிக்கை தொடர்பாக தமிழக அரசு பரிசீலித்து வந்தது. அதனைத் தொடர்ந்து, ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்ற பள்ளிக் கல்வித் துறை, காலாண்டு விடுமுறையை அக்டோபர் 6 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது. காலாண்டு விடுமுறை முடிந்து அக்டோபர் 7 ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
இந்நிலையில், காலாண்டு விடுமுறை தொடங்கியுள்ள நிலையில், சென்னை மெரினா கடலில் குளிப்பதற்காகச் சென்ற பிளஸ் 2 மாணவர் கடலில் மூழ்கி காணாமல் போன சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. மாணவரைத் தேடும் பணியில் தீயணைப்புத் துறை வீரர்கள் உள்ளிட்ட வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை மெரினா கடற்கரையில் இன்று காலை 6 மணிக்கு தேனாம்பேட்டையில் இருந்து 6 சிறுவர்கள் குறிப்பதற்காக வந்துள்ளனர். காலாண்டு விடுமுறை தொடங்கியவுடன் மெரினா கடற்கரைக்குச் சென்று வாலிபால் விளையாடலாம், குளிக்கலாம் என்று நண்பர்கள் அனைவரும் திட்டமிட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, அனைவரும் மெரினா கடற்கரைக்கு இன்று வந்து விளையாடிக் கொண்டிருந்துள்ளனர்.
அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினர் கடலில் இறங்க வேண்டாம் என்று அறிவுறுத்திச் சென்றுள்ளனர். ஆனாலும் அவர்கள் நீண்ட நேரமாக கடற்கரையில் விளையாடிவிட்டு, கடலில் குளிக்க முயன்றுள்ளனர். அப்போதுதான், 12 ஆம் வகுப்பு பயிலும் மேகாபிரியன் என்கிற சிறுவனும் குளித்துள்ளார். அப்போது, மாணவர் கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். இதனை, கடற்கரையில் இருந்த அனைவருமே பார்த்துள்ளனர். அப்போது, சிறுவனின் தலை மட்டுமே வெளியில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அருகில் இருந்த காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர், கடலோர காவல் படையினர் உள்ளிட்டோருக்குத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் மெரினா கடலில் மாணவரைத் தேடி வருகின்றனர். ஆனால், அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து மீனவர்களும் தொடர்ந்து மாணவரைத் தேடி வருகின்றனர். என் பிள்ளை போச்சே என்று பிளஸ் 2 மாணவரின் தாய் கதறும் சம்பவம் காண்போர் அனைவரையும் கண்கலங்கச் செய்ய வைத்தது.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications