மூவரும் ஜாலியாக இருக்கலாம்.. இருவருமே என் இரு கண்கள்! சென்னையில் ஒரு முக்கோண காதல்.. யாரிந்த பெண்கள்
சென்னை: இன்ஸ்டாகிராம் மூலம் இளைஞர்களுக்கு வலை விரித்து பணத்தை பறிக்கும் கும்பல் ஒன்றை சென்னையில் போலீசார் கைது செய்துள்ளனர்.. இது தொடர்பாக இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. இந்த கொலை தொடர்பாக 3 பேர் கைதாகி உள்ள நிலையில், 3 பேரை தேடி வருகிறார்கள் போலீசார்.. என்ன நடந்தது சென்னையில்?
சென்னை பல்லாவரம் அருகே உள்ள திரிசூலம் அம்மன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வக்குமார்... இவருக்கு 22 வயதாகிறது.. கூலி வேலை செய்யும் இளைஞர். இன்னும் திருமணம் ஆகவில்லை..

அதே பகுதியான பழைய பல்லாவரத்தை சேர்ந்த 24 வயதான ரீனா என்பவருடன் செல்வக்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் நெருக்கமாக மாறியது.. ஆனால் ரீனாவுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது.. கணவருடன் ஒன்றாக வாழ்ந்தும் வருகிறார்.. ஆனாலும் செல்வக்குமாருடன் தன்னுடைய கள்ளக்காதலை வளர்த்து வந்துள்ளார்..
பழைய பல்லாவரம்
கணவர் வேலைக்கு சென்ற நேரங்களில் ரீனாவும், செல்வக்குமாரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ரீனாவின் தோழியான 25 வயதான ரஜிதாவுடனும் செல்வக்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது..
ஆரம்பத்தில் சாதாரணமாக இருந்த இந்த தொடர்பு, பின்னர் ரீனாவுக்கு தெரியாமல் தொடர்ந்தது. ஒருகட்டத்தில் இவர்களின் உறவு ரீனாவுக்கு தெரிய வந்து கடும அதிர்ச்சி அடைந்தார்.. செல்வக்குமாரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பி, தகராறு செய்தார்.. உடனே இந்த விஷயத்தை கேள்விப்பட்டு ரஜிதாக அதிர்ச்சி அடைந்து அவரும் இதுகுறித்து கேள்வி எழுப்பி உள்ளார்..
இருவருமே இரு கண்கள்
அதற்கு செல்வக்குமார், ரீனா ரஜிதா இருவரிடமும் "நீங்கள் இருவருமே எனது இரண்டு கண்கள்.. இருவருமே எனக்கு வேண்டும்" என்றாராம்.. இதைக்கேட்டு ரீனா மற்றும் ரஜிதா இருவரிடமும் கோபப்பட்டுள்ளனர்..
தங்களை செல்வக்குமார் நம்ப வைத்து ஏமாற்றிவிட்டதாக இரு பெண்களுமே கண்ணீர் விட்டு அழுதனர்.. இதனால் மனஅழுத்தத்திற்கும், கோபத்திற்கும் ஆளானார்கள்..
செல்வக்குமார் உயிருடன் இருக்கும் வரை தங்களுக்கு நிம்மதி இருக்காது என்று இரு பெண்களும் ஒரு முடிவுக்கு வந்தனர். இதனைத் தொடர்ந்து, இருவரும் சேர்ந்து செல்வக்குமாரை தீர்த்துக் கட்ட சதித் திட்டம் தீட்டினர்.
அந்தத் திட்டத்தின்படி, கடந்த புதன்கிழமை இரவு, "நாம 3 பேரும் சேர்ந்து உல்லாசமாக இருக்கலாம்" என்று ஆசை வார்த்தைகள் கூறி செல்வக்குமாரை போனில் அழைத்துள்ளனர்.. பழைய பல்லாவரம் சுபம் நகர் பகுதிக்கு வருமாறும் சொல்லி உள்ளனர்.. காரணம் அந்த இடத்தில்தான் செல்வக்குமாருக்காக கொடூரமான வலை விரிக்கப்பட்டிருந்தது.
மூவரும் உல்லாசமாக இருக்கலாம்
ரீனா, ரஜிதா இருவருடன் சேர்ந்து, தங்களுக்கு தெரிந்த 4 ஆண் நண்பர்களையும் உதவிக்கு அழைத்து கொண்டு, முன்கூட்டியே அங்கே தயாராக காத்திருந்தனர். அனைவரது கையிலும் பட்டா கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்தனர்...
எதிர்பார்த்தபடியே செல்வக்குமார் அங்கு வந்து நின்றார்.. உடனே அனைவரும் சேர்ந்து அவரை ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். தலை, முகம் உள்ளிட்ட உடலின் பல பகுதிகளில் கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டது.. இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார் செல்வக்குமார்.. உடனே அனைவரும் அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டனர்..
மயங்கி விழுந்து நடித்து ஓடிய ரீனா
ஆனால் போலீசாருக்கு தங்கள் தங்கள் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதால், வழிப்பறி திருடர்கள் தங்களை தாக்கியது போல் பிளான் செய்தார்கள்.. இதற்காக ரீனா சாலையில் மயங்கி விழுந்தது போல் நடித்தார்.. பிறகு அங்கிருந்து நைசாக தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த கொடூர சம்பவத்தை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக பல்லாவரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த செல்வக்குமாரை மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், செல்வக்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
17 வயது சென்னை சிறுவன்
இந்த சம்பவம் குறித்து பல்லாவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பல்லாவரம் பகுதியில் பதுங்கியிருந்த 2 பெண்களையும், 17 வயது சிறுவனையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, இன்ஸ்டாகிராம் மூலம் இளைஞர்களை காதல் வலையில் சிக்க வைத்து, அவர்களிடம் பணம் சம்பாதித்து உல்லாசமாக வாழ்ந்து வருவதாக வாக்குமூலம் சொன்னார்கள்.. .
செல்வக்குமாரிடமும் இருவரும் பணத்திற்காகவே பழகினார்களாம்.. இது குறித்து செல்வக்குமாருக்கு சந்தேகம் எழவே, இவர்களுக்கிடையே அடிக்கடி பிரச்சினைகள் வெடித்துள்ளன. அதனால்தான், ஆசை வார்த்தைகள் கூறி அழைத்து, நண்பர்களை வரவழைத்து கொடூரமாக வெட்டி கொன்றோம் என்றும் போலீசில் ஒப்புக் கொண்டார்கள்..
இதையடுத்து, இப்பெண்களுக்கு உதவிய ஆண் நண்பர்கள் தற்போது தலைமறைவாக உள்ளதால், அவர்களை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications