’ஜெய்பீம்’ சர்ச்சைக்கு ஒரு நியாயம்? ‘லட்டு’க்கு ஒரு நியாயமா? மீம்ஸ் கண்டெண்ட் ஆன கார்த்தி
சென்னை: தவறாக எந்தக் கருத்தையும் தெரிவிக்காதபோது எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நடிகர் கார்த்திக்கு எதிராக நெட்டிசன்கள் ரீல்ஸ் மற்றும் கருத்துகள் மூலம் ட்ரோல் செய்து வருகின்றனர்.
திருப்பதி லட்டு விவகாரம் ஆந்திர மாநிலத்தைத் தாண்டி தமிழ்நாட்டிலும் ஒரு சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. 'மெய்யழகன்'பட புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் கார்த்தியிடம், 'ரெண்டு லட்டு தின்ன ஆசையா கண்ணா?' என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒரு கிடுக்குப் பிடி கேள்வியைத் தூக்கி வீச, அதற்கு 'லட்டு பற்றி இப்போது பேச வேண்டாம். அது சென்சிடிவ் டாபிக்' என்று நல்ல விதமாகத்தான் கூறியிருந்தார்.

அதைக்கேட்ட ஆந்திர மாநில துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண, "லட்டு விவகாரத்தை நகைச்சுவையாக்க வேண்டாம். திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் லட்டைப் பற்றி கிண்டலாகப் பேசியிருப்பதைப் பார்த்தேன். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்து சனாதன தர்மத்தை நாம் மதிக்க வேண்டும்" என்று எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதற்கு உடனடியாக பதிலளித்த நடிகர் கார்த்தி, "நான் பேசியதைத் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நாம் நம் கலாச்சாரத்தை மதிக்கக்கூடியவன். திருப்பதி வெங்கடேஷ பெருமாளின் பக்தன்" என்று கூறியிருந்தார்.
இதனிடையே பரிதாபங்கள் சேனல் வெளியிட்ட வீடியோ ஒன்று நீக்கப்பட்டுள்ளது. யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் அதை வெளியிடவில்லை என்றும் சேனல் தரப்பிலிருந்து வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோ எப்படியும் நீக்கப்படும் என்பதை உணர்ந்த நெட்டிசன்கள் முன்பே அதை டவுன் லோட் செய்து வைத்து இப்போது வைரலாக பரப்பி வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் போடும் தம்பதி கூட கார்த்தி மன்னிப்பு கேட்ட விவகாரத்தைக் கலாய்த்துள்ளனர். பலரும் தவறாக எதையும் பேசாத போது எதற்காக அவசர அவசரமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கேள்வி எழுப்பி வருகின்றன. ப்ளு சட்டை மாறன், "இதுவே தன்மானத் தமிழன் விஜயகாந்த்தாக இருந்திருந்தால் நிச்சயம் மன்னிப்பு கேட்டிருக்க மாட்டார். பாகுபலி ரிலீஸ் சமயத்தில் காவிரி விவகாரத்தில் கர்நாடகத்திற்கு எதிராகப் பேசியதற்கு மன்னிப்பு கேட்டார் சத்யராஜ். இப்போது ஆந்திர நடிகர் பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்கிறார் கார்த்தி" என்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் சினிமா விமர்சகர் அந்தணன், "இது கோடிக்கணக்கான மக்களின் உணர்வு சம்பந்தப்பட்ட விசயம் இது. எனவே அதைப் பற்றி பேசுபவர்கள் பொறுப்புடன்தான் நடந்துகொள்ள வேண்டும். அதே வேளையில் இதற்குள் அரசியல் இருப்பதாகவும் சிலர் சொல்கிறார்கள். அதையும் மறுக்க முடியாது. லட்டில் மிருகத்தின் கொழுப்பு கலந்துள்ளது என்பதுடன் மீன் எண்ணெய் கூட கலந்துள்ளதாகச் சொல்கிறார்கள். சாதாரணமாக மீன் உண்ட பிறகு கையைக் கழுவினாலே அதில் வாடை வருகிறது. அப்படி உள்ள போது மீன் எண்ணெய் உள்ள லட்டில் எப்படி நெய் வாசனை வர முடியும்? அதில் மீன் வாடை தானே வர முடியும்?

கார்த்தி தவறாக ஒன்று பேசவே இல்லை. அவர் என்னிடம் லட்டு பற்றி எதையும் கேட்காதீர்கள் என்றுதான் சொல்கிறார். அதில் ஒரு தவறும் இல்லை. ஆனால், உடனே போய் மன்னிப்பு கேட்கிறார். ஒன்றுமே பேசாத போது நம்மிடம் ஏன் பவன் பாய்கிறார் என்றுதானே கார்த்தி யோசித்து இருக்க வேண்டும்?
இதே ராக்கெட் ராஜா என்ற படத்தில் கார்த்தி நடித்த போது ஒரு சர்ச்சை எழுந்தது. அப்போது தென்மாவட்டங்களில் அதே பெயரில் உள்ளவர் தன்னைதான் குறிப்பிடுவதாக ஒரு பிரச்சினையை எழுப்பினார். அவர் நீதிமன்றம் வரைப் போய் வழக்குப் போட்டபோதும் கூட அன்றைக்கு அந்தப் பெயரை மாற்ற முடியாது என்று தைரியமாக நின்றார். உண்மையாக அதே பெயரில் ஒருவர் இருக்கிறார். அவர் அதை மாற்ற சொன்ன போது அதை மாற்ற மறுக்கிறார். ஆனால், இன்று செய்யாத தவறுக்காக மன்னிப்பு கேட்கிறார்.
இது கார்த்தி மீது இருந்த மரியாதையைப் பெரிய அளவில் குறைத்துவிட்டது. இந்த விஷயத்தில் கார்த்தி வீரம் எங்கே போனது? கெத்து என்ன ஆனது? அதிகாரம் நம்மை மிரட்டுகிறது என்ற உடனேயே பயம் வருகிறது. பவன் கல்யாண் அங்கே துணை முதல்வராக இருக்கிறார். அவரைப் பகைத்தால் படம் ரிலீஸ் ஆகாது. அதனால் இழப்பு வந்துவிடும். அந்தப் பயம்தான்.

இன்னும் சொல்லப் போனால் பவன் கல்யாண் பதில் சொன்னது பிரகாஷ்ராஜுக்குத்தான். கார்த்தியைப் பற்றி அவர் சொல்லவே இல்லை. வலியப் போய் மன்னிப்புக் கேட்கிறார். பிரகாஷ் ராஜுக்கு உள்ள அதே தைரியம் கார்த்திக்கு இல்லை. பிரகாஷ் ராஜ் நாட்டில் உள்ள பல பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கிறார். அதற்காகப் பல படங்களில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அதனால் பரவாயில்லை எனத் தைரியமாக நிற்கிறார் பிரகாஷ் ராஜ்" என்று பேசியுள்ளார்.
இதேபோன்று அன்றைக்கு 'ஜெய்பீம்' விவகாரத்தில் வன்னியர் சமூகத்தை இழிவுபடுத்தும் விதமாக காலெண்டர் வைக்கப்பட்டதை நீக்கச் சொன்னபோது சூர்யா வருத்தம் தெரிவிக்கவில்லை. அதைப் பற்றி அவர் கண்டுகொள்ளவே இல்லை. இது மட்டும் ஒரு குறிப்பிட்ட மக்களைப் புண்படுத்தும் செயல் இல்லையா? அதான் நுண் அரசியல் என்றும் நெட்டிசன்கள் இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு கார்த்தி குடும்பத்தை விமர்சித்து வருகிறார்கள்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications